Connect with us
rajini

Cinema News

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா? – லீக் ஆன தகவல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ஆனால், எதிர்மறையான விமர்சனங்கள், மழை மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என பல காரணங்களால் இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இப்படத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சில கோடிகள் வரை நஷ்டம் எனக்கூறப்படுகிறது.எ னவே, இதை சரிகட்ட ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. ஆனால், ரஜினி அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.

pandiraj

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. பாண்டிராஜ் ஏற்கனவே, பசங்க,மெரினா, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.. இப்படம் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

கிராமத்து கதைகளை எடுப்பதில் பாண்டிராஜ் திறமையானவர் என்பதால் மீண்டும் ஒரு கிராமத்து கதையில் ரஜினி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top