விரைவில் தொடங்குகிறது ரஜினியின் அடுத்த படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
மூன்றாவது முறையாக இப்படத்தின்மூலம் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், முக்கியமான கதாபாத்திரத்தில் மீனா, குஷ்பூவும் நடித்துள்ளார்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூலில் மேலும் சில சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய ரஜினி தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதையடுத்து அவர் தற்போது அடுத்த படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

karthik subburaj-rajini
அடுத்ததாக இவர் யார் படத்தில் நடிக்க உள்ளார் என்பது இன்னும் தெரியாமலே உள்ளது. ஒரு இளம் இயக்குனர் படத்தில் ரஜினி நடிப்பார் என முன்பே கூறப்பட்டது. அந்தவகையில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. பட்ஜெட் காரணமாக அவர் ஒதுங்கி விட்டதாகவும், பேட்டை படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அண்ணாத்த முடியும்போதே ரஜினி சிவாவுடன் மீண்டும் இணையவேண்டும் என அவரது மகள் ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்திருந்தார். எனவே ரஜினி, சிவா படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்புள்ளது. இவர்களில் யார் இயக்குவார் என தெரியவில்லை. ஆனால், அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.