தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போதுள்ள இளம் தலைமுறை நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ புதுமுக நடிகர்கள் வந்தாலும் நம் தலைவரை யாராலும் ஓரங்கட்ட முடியவில்லை. அந்தளவுக்கு இன்றும் அதே புத்துணர்ச்சியுடனும் அதே ஸ்டைலுடனும் சினிமாவில் கெத்து காட்டி வருகிறார் ரஜினி.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த வயதிலேயும் ஆக்ஷன் படங்களில் மாஸ் காட்டி வருகிறார். அன்று முதல் இன்று வரை ஃபேமிலி ஆடியன்சை தக்க வைத்து வருகிறார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ரஜினி.
இதையும் படிங்க: சன் டிவியின் டாப் 5 டிஆர்பி சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்… என்ன நடக்கும் தெரியுமா?
சமீபத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ரஜினி. சரியானதும் அதே உத்வேகத்துடன் மீண்டும் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.இந்த நிலையில் ரஜினியுடனான தன் பழைய நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார் கேமிராமேன் ரவி. இவர் 80களில் மிகவும் பிரபலமான கேமிராமேனாக இருந்தவர்.
ரஜினியின் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவா. ஆக்ஷன் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் ஷோபனா, ரகுவரன் மற்றும் சௌகார் ஜானகி ஆகியோர் நடித்திருப்பார்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினி கொஞ்சம் டென்சனாக இருந்தார் என கேமிராமேன் ரவி கூறினார். ஏனெனில் படத்தின் இயக்குனர் ஒவ்வொரு ஷாட்டுக்கும் இடையில் கேமிராவை ஸ்டெடி பண்ணித்தான் எடுக்கனுமாம்.
ஹை ஸ்பீடு பிலிம் எல்லாம் கிடைக்காதாம். அதனால் கட் சொல்லி ஸ்டெடி பண்ணித்தான் எடுக்கனுமாம். இதுவே ரஜினிக்கு எரிச்சலை தந்திருக்கிறது. அந்த நேரத்தில் கேமிராமேன் ரவி ரஜினியை போட்டோ எடுக்க சென்றிருக்கிறார். இவரை பார்த்ததும் ரஜினி என்ன என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரவி ‘ரஜினி ஸ்டில்’ என கேட்டிருக்கிறார். அதுக்கு ரஜினி ‘என்ன நீங்களும் ஷாட்டுக்கு ஷாட்டு ஸ்டில் எடுக்கனுமா’ என கோபமாக கத்தினாராம்.
இதையும் படிங்க: சுசித்ராவை இயக்குவது நயன்தாராவா? தனுஷின் நடவடிக்கையில தான் இனி எல்லாமே இருக்கு!
உடனே ரவி கோபமாக சென்றுவிட்டாராம். ரஜினியின் உதவியாளர் ரவியிடம் ‘உங்களை சார் கூப்பிடுகிறார்’ என சொல்ல ரவி போக இவரிடம் மன்னிப்பு கேட்டாராம் ரஜினி. உடனே ரவி ‘ரஜினி நீ மட்டும் கஷ்டப்பட்டு வரல. நானும் அப்படித்தான் வந்திருக்கேன். என்னை திட்டினாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் தொழில தொந்தரவு பண்ணா என்னால தாங்க முடியாது’ என கூறினாராம்.
இயக்குனர் லோகேஷ்…
Actor vishal:…
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக…
நடிகை நயன்தாரா…
Vijayasanthi: தமிழ்…