’பேட்ட’ல இவர் தான் நடிக்க வேண்டியிருந்தது...! கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி..! இயக்குனர் கூறிய தகவல்..

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான படம் ’பேட்ட’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் ரஜினி படத்திற்காக முதன் முதலில் இசையமைகிறார் அனிருத்.
மேலும் சிம்ரன் முக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார். மேலும் பாபிசிம்ஹா, சசிகுமார் உட்பட பலரும் நடித்துள்ள இந்தப் படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. மற்றும் வெற்றிகரமாக ஓடியது. படத்தில் ரஜினி மிரட்டிருப்பார்.
சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்திருப்பார். இந்த நிலையில் கார்த்திக் சுப்பாராஜ் தற்போது 777 சார்ளி என்ற படத்தைஇயக்கி சமீபத்தில் தான் இதன் ட்ரெய்லர் வெளியானது. படத்தில் ஒரு நாயின் கதாபாத்திரம் தான் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த படத்தில் கன்னட நடிகர் ரக்ஷிட் ஷெட்டி நாயகனாக நடித்திருப்பார்.
சமீபத்தில் கார்த்திக் சுப்பாராஜ் கூறும்போது ரக்ஷிட் ஷெட்டிதான் பேட்ட படத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது. இவர் சில படங்களில் கமிட் ஆகியதால் இவரால் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.