ரஜினியிடமிருந்து வந்த போன் கால்!. ஆடிப்போன பாண்டியராஜன்!.. அதனாலதான் அவர் சூப்பர்ஸ்டார்!...
திரையுலகில் உச்சம் தொட்டாலும் எளிமையாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. பொதுவாக பல நடிகர்களிடம் இருக்கும் எந்த ஈகோவும் இல்லாதவர். எளிமையானவர். எந்த சூழ்நிலைக்கும் தன்னை பொருத்திக்கொள்பவர். படப்பிடிப்பு தளத்தில் இவருக்கு என தனி கேரவான் கொடுத்தாலும் அதில் இருக்காமல் வெட்டவெளியில் சேர் போட்டு அமர்ந்திருப்பார். மிகவும் சாதாரண உணவைத்தான் சாப்பிடுவார்.
எல்லோரிடமும் மரியாதையுடனும் தலைக்கணம் இல்லாமலும் பேசுவார். மேடைகளில் கூட தனக்கும் இருக்கும் அல்லது இருந்த கெட்ட பழக்கங்கள் பற்றி வெளிப்படையாக பேசுவார். இதனால் மற்றவர்கள் தன்னை நினைப்பார்கள் என எதைப்பற்றியும் யோசிக்க மாட்டார். தான் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை என்றாலும் துவண்டு விழாவில் மீண்டும் மீண்டும் எழுந்து உற்சாகமாக நடிக்க வருவார்.
ரஜினியை எதிரியாக நினைத்து திட்டியவர்களின் வீட்டில் ஒரு துக்கம் எனில் உடனே தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்வார். ஒரு திரைப்படத்தை பார்த்து அவருக்கு பிடித்துவிட்டால் உடனே அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என எல்லாவற்றையும் போனில் அழைத்து மனம் விட்டு பாராட்டுவார். அதனால்தான் திரையுலகில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டார் பட்டம் இவரிடம் மட்டுமே இருக்கிறது. இவரின் பட்டத்துக்குதான் இப்போதும் சில நடிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.
ரஜினியை செயலை பற்றி நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை நான் விமான நிலையத்தில் இருந்த போது ரஜினி அங்கே வந்தார். அவரை பார்த்ததும் நான் கையசைத்தேன். அவர் என்னை பார்த்தாரா என தெரியவில்லை. அவரை சுற்றி கூட்டம் கூடிவிட்டதால் அங்கிருந்து சென்றுவிட்டார். நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அடுத்தநாள் அவரிமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ரஜினி சார் ‘நீங்கள் என்னை பார்த்து கையசைத்ததை பார்த்தேன். அந்த சூழ்நிலையில் உங்களிடம் பேச முடியவில்லை. அதற்காக மன்னித்துவிடுங்கள்’ என சொன்னார். நான் பதறிப்போய்விட்டேன். ரஜினி போன்ற பெரிய நடிகர் அதை செய்ய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஆனால், அவர் அதை செய்கிறார். அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார்’ என பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாரும் சிரிச்ச படம்!.. ஆனா சீரியஸா பார்த்த கமல்!.. மிர்ச்சி சிவா பகிர்ந்து சுவாரஸ்ய தகவல்!…