More
Categories: Cinema News latest news

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்!….சர்சையை கிளப்பிய ரஜினியின் பேச்சு!….

நேற்று சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது பொன்னியின் செல்வனின் ஆடியோ லாஞ்ச் விழா. இந்த விழாவில் திரையுலகை சார்ந்த பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் மற்றும் ரஜினி இருவரும் கலந்து கொண்டனர். மேலும் ஐஸ்வர்யா ராயும் வந்திருந்தார்.

Advertising
Advertising

அப்போது மேடையில் பேசிய நடிகர் ரஜினி தான் நடித்த தளபதி படம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அந்த படத்தை மணிரத்தினம் தான் இயக்கியிருந்தார். மேலும் நடிகர் மம்மூட்டியும் நடித்திருந்தார். அந்த சமயத்தில் ரஜினி கதாபாத்திரத்திற்காக மேக்கப் எதுவும் போடாமல் சட்டையும் பேண்டும் லூஸாக இருந்தால் தான் நன்றாக இருக்கும் என கூற ரஜினி வேண்டாம் என கூறினாராம்.

இதையும் படிங்கள் : மாமாவை நம்பி அட்டகாசம் செய்த அருண்விஜய்…! கோடிக்கு பிளான்போட்டு தெருக்கோடிக்கு போன சம்பவம்…

மேலும் பேசும் உரையாடல்கள் எல்லாம் நல்லா ஃபீல் பண்ணி பேசுங்கள் என கூறுவாராம். ஆனால் ரஜினிக்கோ ஃபீல் பண்ண தெரியாதாம். மணிரத்தினம் படம் என்றாலே எப்படி இருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். அதனால் நிறைய டேக்குகள் எடுத்தாராம் ரஜினி. உடனே கமலுக்கு போன் பண்ணி இப்படி எல்லாம் இருக்கிறது. என்ன பண்ணலாம் கமல் என்று ரஜினி கேட்க அதற்கு கமல் ஒன்றும் பண்ண வேண்டாம்.

அவரிடம் போய் ஒரு தடவை நடித்துக் காட்டுங்கள் என்று கூறுங்கள். அதை பார்த்து உள்வாங்கி நடிங்கள் என கமல் சொன்னாராம். அதன் படியே மணிரத்தினத்திடம் சொல்ல அவரும் நடித்துக் காட்டுனாராம். இதை மேடையில் கூற இதை பார்த்த இணையவாசிகள் எந்த காலத்துல மணிரத்தினம் நடித்து காட்டுவார். அவர் நடிச்சு காட்டுனதே இல்லை. நடிகர்களை நடிக்க சொல்லுவார். அதிலிருந்து தனக்கு பிடிச்சது வரும் வரை பொருத்து இருந்து பார்த்து எடுத்து கொள்வார் என்று ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

Published by
Rohini