அண்ணாமலை படத்தில் குஷ்புவின் மேக்கப்பை பார்த்து ரஜினி சொன்ன அந்த ரகசியம்....! தலைவர் வேற லெவல்...
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த். நடிப்பிலும் சரி ஸ்டைலிலும் சரி இவருக்கு இணை இவர் தான். மேலும் நகைச்சுவை கலந்த தன் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் 90களில் வந்த படங்கள் பெரும்பாலும் இவரின் நகைச்சுவை திறமையை வெளிப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன.
அண்ணாமலை, முத்து , அருணாச்சலம் போன்ற படங்கள் எல்லாம் இதற்கு உதாரணங்களாகும். மேலும் அண்ணாமலை படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அண்ணாமலை படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை குஷ்பூ நடித்திருப்பார்.
வயதான தோற்றத்தில் இருவரும் தோன்றும் காட்சிகள் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கும். படப்பிடிப்பில் நடிகை குஷ்பூ வயதான தோற்றத்திற்கான மேக்கப் போட்டு வரும் போது ரஜினி குஷ்பூவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாராம்.
உடனே குஷ்பூ ரஜினியிடம் ஏன் அப்படி பாக்குறீங்கனு கேட்க அதற்கு ரஜினி இல்ல உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் ரொம்ப கொடுத்துவைத்தவன் என்று கூறினாராம். ஏன் என குஷ்பூ கேட்க வயதான கெட்டப்-லயும் உன் அழகு கொஞ்சம் கூட குறையல என்று சொன்னாராம் ரஜினி. என்னா தில்லாலங்கடி பண்றாருனு பாருங்க நம்ம தலைவர்..!