எப்பவும் நான்தான் சூப்பர் ஸ்டார்!... ஒருநாள் வசூலில் விஜயை பீட் செய்த ரஜினி....
ரஜினி நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. அஜித்தை வைத்து விஸ்வாசம் என சூப்பர் ஹிட் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க ஆசைப்பட்டன் விளைவாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க அண்ணாத்த படம் உருவானது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சிவாவுடன் ரஜினி இணைந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது.
ஆனால், நேற்று படம் பார்த்த பலரும் படம் சரியில்லை என்றே கருத்து தெரிவித்தனர். ரஜினியின் தீவிர ரசிகர்களை கூட இப்படம் கவரவில்லை என்பதுதான் நிதர்சனம். ரஜினிக்காக படம் பார்க்க வந்த பலரும் ஏமாந்து போனார்கள்.
சிவா ரஜினியை சரியாக பயன்படுத்தவில்லை..ரஜினிக்கு ஏற்ற திரைக்கதையை சிவா உருவாக்கவில்லை. படத்தில் எந்த கதாபாத்திரத்திலும் அழுத்தமும், சுவாரஸ்யமும் இல்லை.. படத்தில் காமெடியே இல்லை.. ரஜினியை வீணடித்துவிட்டார் சிவா..சீரியல் போல் படம் இருக்கிறது.. ஒரே அழுகாச்சி…பெண்களுக்கு பிடிக்கும்…சிவா ஏற்கனவே இயக்கிய வேதாளம், விஸ்வாசம். வீரம் ஆகிய படங்களை மீண்டும் பார்த்தது போலவே இருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனாலும், இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 11 கோடியும், உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.34.92 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள் வசூலை ஒப்பிட்டால் இப்படம் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ படத்தின் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. சர்கார் முதல் நாள் வசூல் 31.62 கோடி ஆகும். ஆனால், அண்ணாத்த படம் ரூ.34.92 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம், மீண்டும் சூப்பர்ஸ்டார் நான்தான் என நிரூபித்துள்ளார் ரஜினி.
மேலும், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் இப்படம் மேலும் பல கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.