லோகேஷிடம் ரஜினி போட்ட ஒரே கண்டிசன்!.. விக்ரமையும் மிஞ்சும் ரஜினி 171?..

by Rohini |   ( Updated:2023-04-29 11:51:49  )
lokesh
X

lokesh

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் லோகேஷ். இவர் தற்போது விஜயை வைத்து ‘லியோ’ படத்தை எடுத்து வருகிறார். படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒரு சின்ன ரோலிலும் லோகேஷ் நடித்திருக்க்கிறார். அதுமட்டுமில்லாமல் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அனிருத்துடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

நடிப்பு , இயக்கம் இவற்றை தாண்டி தயாரிப்பிலும் கவனம் செலுத்த உள்ளார் லோகேஷ். இதனை அடுத்து ரஜினியின் 171 வது படத்தையும் லோகேஷ் தான் இயக்க போகிறார். அந்தப் படத்திற்காக லோகேஷுக்கு பேசப்பட்ட சம்பளம் 40 கோடியாம். இந்தப் படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்ற போட்டி இருந்து வந்தது.

முடிவில் சன் பிக்சர்ஸ் தான் ரஜினி 171 படத்தை தயாரிக்க போகிறதாம். மேலும் ரஜினிக்கு இந்தப் படத்தில் சம்பளமாக 115 கோடியாம். ஆனால் இது ரஜினிக்கு மிகக் குறைவான சம்பளமாக சொல்லப்படுகிறது. ஆனால் ரஜினி இந்தப் படத்தில் சம்பளத்தை பற்றியெல்லாம் கவலைப் படவில்லையாம். எவ்ளோ கொடுத்தாலும் பரவாயில்லை என்ற மனப்பாங்கில் தான் இருக்கிறாராம்.

அதற்கு பதிலாக லோகேஷிடம் ஒரே ஒரு கண்டீசன் மட்டும் வைத்துள்ளாராம் ரஜினி. என்னவெனில் ரஜினிக்கு மிகப்பெரும் மாஸை ஏற்படுத்திய படமாக பாட்ஷா அமைந்தது. அந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என லோகேஷிடம் ரஜினி சொல்லியிருக்கிறாராம். அதனாலேயே சம்பளத்தை பற்றி ரஜினி கவலை கொள்ளவில்லையாம்.

இந்தப் படம் லியோ படம் முடிந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது. ஏற்கெனவே லோகேஷின் லைன் அப்பில் விக்ரம் 2, கைதி 2 ஆகிய படங்கள் வரிசை கட்டிகொண்டு இருக்கின்றது. விக்ரமையும் மிஞ்சும் அளவிற்கு ரஜினி ஒரு மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்க படுகிறது.

Next Story