கால்ல விழாத குறையா கெஞ்சிய ரஜினி...! எல்லாம் அந்த படத்துக்காக...! கடைசில எங்க வரைக்கும் போயிருக்கானு பாருங்க...

by Rohini |
rajini_main_cine
X

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு மும்பை தாதாவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார்.

rajini1_cine

மேலும் நடிகர் ஜெய், நடிகை தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபகாலமாகவே ஆக்‌ஷன் கலந்த படங்களையே தேர்ந்தெடுக்கும் ரஜினி அந்த காலத்திலயும் முழு நேர ஆக்‌ஷன் ஹீரோவாகவே பிரதிபலித்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்ததாம்.

இதையும் படிங்கள் : நானும் லோகேஷும் அந்த மாதிரி காதலர்கள்…! தன் ஆசையை வெளிப்படுத்திய மன்சூர்… நிறைவேற்றுவரா லோகி பாய்…?

rajini2_cine

உடனே இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் சென்று இப்படி ராகவேந்திரா படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நீங்கள் தான் இயக்குனர். தயாரிப்பாளர் பாலசந்தர் என்று சொன்னதும் முத்துராமன் ரஜினி நீங்கள் காதல், ஆக்‌ஷன் கதைகளில் நடித்துக் கொண்டிருக்க எப்படி ஒரு சாதுவாக இந்த படத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? அதனால் கொஞ்ச நாள் போகட்டும். உங்களுக்கு வயதாகட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி அனுப்பி விட்டாராம்.

rajini3_cine

பின் பாலசந்தர் முத்துராமனை அழைத்து இப்படி சொன்னாயாமே? ரஜினி ரசிகர்கள் எப்படி நடித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். அதனால் அதை பற்றி கவலை வேண்டாம். என்று பாலசந்தர் சொன்னதும் முத்துராமன் சம்மதித்தாராம். அந்த படம் ஆரம்பித்ததில் இருந்து ஒட்டுமொத்த யுனிட்டும் அசைவத்தை தொடவில்லையாம். ரஜினியும் அப்படியே ராகவேந்திரா மாதிரி வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம். பார்த்ததும் தொட்டு வணங்குவது மாதிரியான தோற்றத்தில் இருந்தாராம் ரஜினி. படமோ சூப்பர் டூப்பர் ஹிட். மேலும் ரஜினிக்கு 100வது படமும் கூட.

Next Story