செம மாஸ் டைட்டிலுடன் களம் இறங்கும் ரஜினி... சும்மா தெறிக்கும் ‘தலைவர் 170’ அப்டேட்..

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்டு 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்களும். சமீபத்தில் வெளியான ஷோகேஷ் வீடியோவும் ரசிகர்களை கவர்ந்ததோடு, இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் லால் சலாம் படத்திலும் ரஜினி முடித்துவிட்டார்.
ஏற்கனவே யார் சூப்பர்ஸ்டார் என்கிற விவாதம் கடந்த சில மாதங்களாக ஓடிகொண்டிருக்கிறது. ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளும், ஜெயிலர் ஆடியோ விழாவில் ரஜினி சொன்ன பருந்து - காக்கா கதையும் அந்த தீயில் எண்ணையை ஊற்றியுள்ளது. எனவே, விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் தொடர்ந்து மோதி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகிழ்திருமேனிக்கு அஜித் கொடுத்த ஷாக்!.. மறுபடியும் முதல்ல இருந்தா!. அட போங்கடா!..
இந்நிலையில், ரஜினி தனது 170வது திரைப்படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளார் என்பதும், இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இப்படத்திற்கான லுக் டெஸ்ட் நேற்று சென்னையில் நடந்துள்ளது. இப்படத்திற்காக இந்தியாவின் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவரை லைக்கா நிறுவனம் களம் இறக்கியுள்ளது. அவர் ரஜினியை ஒரு புது லுக்குக்கு மாற்றியுள்ளார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வைரலாக துவங்கிவிட்டது.
லுக் டெஸ்ட்டின் ரிசல்ட்டாக ரஜினி சும்மா மாஸாக இருக்கிறாராம். இயக்குனர் வின்செண்ட் செல்வா வேட்டையன் எனும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறாராம். அந்த தலைப்பை எங்களுக்கு கொடுங்கள் என லைக்கா நிறுவனம் அவரிடம் கேட்டுள்ளது. எனவே, அது தலைவர் 170 படத்திற்காகத்தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
வேட்டையன் என்பது சந்திரமுகி படத்தில் ரஜினி ஏற்ற வேடம். எனவே, காவல் அதிகாரியாக வரும் ரஜினிக்கு வேட்டையன் என்கிற தலைப்பு செம மாஸாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல எப்பவுமே விஜய் தான் டாப்!! ரஜினியால கூட முந்தவே முடியாதாம்!