
Cinema History
அஜித் தான் வேணும்.. அடம்பிடித்த ரஜினிகாந்த்.! வெளியான 15 வருட சீக்ரெட்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1980ஆம் வருடம் வெளியான திரைப்படம் பில்லா. இந்த படத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி இருப்பார். இந்த படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த படத்தின் ரீமேக். இந்த திரைப்படம் அப்போது மிக பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தை மீண்டும் தமிழில் 2007ஆம் ஆண்டு மரு உருவாக்கம் செய்தனர். அதே கதை, வேறு மாதிரியான திரைக்கதை என அமைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டது. அதற்கான ரஜினியிடம் அனுமதி கேட்கப்பட்டதாம்.
பில்லா படத்தை வேறு நடிகரை வைத்து படமாக்க திட்டமிட்டுள்ளோம். என்று கூறவே, உடனே ரஜினி, ஏன் வேறு நடிகர், அஜித் இருக்காரே. அவரை வைத்தே நீங்கள் படமாக எடுக்கலாமே நன்றாக இருக்கும் என அஜித்திற்கு படக்குழுவினரிடம் சிபாரிசு செய்தாராம் ரஜினி.
இதையும் படியுங்களேன் – விஜய் சேதுபதி செஞ்ச காரியத்தால் நொந்து கொண்ட இயக்குனர்கள்.! நீங்க இப்படி பட்டவரா…?
உடனே, அஜித்தை நாயகனாக வைத்து படத்தை எடுத்தனர். விஷ்ணுவர்தன் செம ஸ்டைலாக அஜித்தை அந்த படத்தில் காண்பித்தார். ரஜினி ஸ்டைலில் இருந்த பில்லாவை அஜித் ஸ்டைலான பில்லாவாக மாற்றினார் விஷ்ணுவர்தன். படம் இதுவரை இல்லாத அளவுக்கு மெகா ஹிட்டானது.
அஜித்திற்காக ரஜினி சிபாரிசு செய்தது வீண் போகவில்லை. இந்த தaகவலை அண்மையில் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்தார்.