இளையராஜா எம்.பி.பதவிக்கு ரஜினிதான் காரணமா...? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி...!
இந்திய அரசால் அண்மையில் தமிழ் நாட்டை சேர்ந்தவரும் சினிமா இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜாவிற்கு மாநிலங்களவையில் எம்.பி பதவி வழங்கப்பட்டது. 6 வருடங்கள் பணிகளை கொண்ட மாநிலங்களையில் 12 உறுப்பினர்கள் மட்டும் குடியரசு தலைவரால நியமிக்கப்படுவர்.
அதில் இந்த முறை அந்த 12 பேரில் 4 பேர் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 12 உறுப்பினர்கள் அரசியலை சாராத மற்ற துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் கலைத்துறையில் இருந்து தேர்ந்தெடுக்க பட்டவர் தான் இளையராஜா.
ஆனால் இவருக்கு முன் இந்த லிஸ்ட்டில் முதலில் இருந்தவர் நடிகர் ரஜினி என சில தகவல்கள் பரவி வருகின்றது. ஏற்கெனவே நான் அரசியலுக்கு வருவேன் வருவேன் என 2020 வரை சொல்லிக்கொண்டிருந்த ரஜினி திடீரென உடல் நலக்குறைவால் என்னால் அழைய முடியாது என பின்வாங்கி விட்டார். மேலும் பா.ஜ,க விற்கு நெருக்கமானவர் தான் ரஜினி என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ரஜினியும் இளையராஜாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சாமி சாமி என்று கூப்பிடும் அளவிற்கு தோஸ்து. ஆதலால் ரஜினி இளையராஜாவை சிபாரிசு செய்திருக்கலாம் என செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.