சினிமாவையே பொரட்டி எடுத்த பிரபல வில்லன் நடிகர்...! இப்படி பொசுக்குனு கால்-ல விழ வைச்சுட்டாரே ரஜினி...?
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் அன்புக்கு அத்தனை ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். அந்த படத்தில் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் உட்பட பலரும் நடிக்கின்றனர்.
இவரின் சினிமா வாழ்க்கையில் காலங்காலமாக பேசும் படமாக ஒரு சில படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அண்ணாமலை, முத்து, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் இன்று வரை கொண்டாடும் வகையில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.
இந்த நிலையில் பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஆனந்த் ராஜ் படத்தின் அனுபவம் பற்றி பத்திரிக்கையாளரிடம் பகிர்ந்து கொண்டார். அந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ரகுவரன் நடித்திருப்பார். மேலும் ஒரு சில துணை வில்லன்களும் நடித்திருப்பர். ஒரு சமயம் ரஜினி ஆனந்த் ராஜை பார்க்க விரும்புவதாக அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது.
அப்போது ஆனந்த்ராஜும் அந்த நேரங்களில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகராக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். ரஜினியை வந்து சந்தித்த போது இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் உள்ளது. அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என ரஜினி வேண்டுகோள் விடுக்க இவரும் ஒப்புக்கொண்டு எந்த மாதிரியான கதாபாத்திரம் என கேட்டாராம். அதற்கு ரஜினி என்னை கட்டி வைச்சு அடிக்க வேண்டும் என கூற ஆனந்த்ராஜ் தயங்கினாராம். மேலும் மக்கள் இதை பார்த்து தியேட்டரை எரித்து விடுவார்கள் எனக் கூற உடனே ரஜினி அதனால் தான் உங்களை வரவழைத்தேன். நீங்கள் தான் என்னை அடிக்க தகுதியான வில்லன் நடிகர். மக்களும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என கூற உடனே ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று நான் நடிக்கிறேன் என கூறினாராம்.