பல ஸ்டைல்களை ஒரே படத்தில் காட்டிய ரஜினி....! யார் உதவியை நாடினார் தெரியுமா...?
தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்கு பேர் போன ஒரே ஆளு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இன்றளவும் அந்த ஸ்டைலாலும் நடிப்பாலும் தான் ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அதனாலயே ஏகப்பட்ட ரசிகர்கள் பலத்தை கொண்ட நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிக்க வந்ததில் இருந்தே பலவித ஸ்டைலால் மக்களை பரவசப்படுத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த் எல்லா விதமான ஸ்டைலையும் ஒரே படத்தில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் திகைத்தார். அந்த படம் தான் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படம்.
இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பார். மேலும் அப்பா வேடத்தில் ஒரு கம்பீரமான தோற்றத்தில் நடித்திருப்பார். மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றால் யாரையாவது முன்மாதிரியாக வைத்து நடிப்பார். இதிலும் கம்பீரமான அப்பா வேடம் என்பதால் அந்த தோற்றமுடைய ஒருவரிடம் அழைத்துக் கொண்டு போ என ஒய்.ஜி.யிடம் கூறியிருக்கிறார்.
அவரும் நேராக ஒரு தியேட்டருக்கு அழைத்துக் கொண்டு போக அங்கு உயர்ந்த மனிதன் படத்தை பார்க்க வைத்திருக்கிறார். அந்த படத்தில் நடிகர் சிவாஜி ஒரு கம்பீரமான கணவனாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதை அப்படியே உள்வாங்கி தான் இந்த நெற்றிக்கண் படத்தில் நடித்தாராம் ரஜினி.