பொழைக்க தெரியாத ஆளா இருப்பாரோ?.. லட்ச ரூபா சம்பளத்தை வேண்டாம் என மறுத்த ரஜினி!..

rajini
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கௌரவமாக மதிக்கக்கூடிய நடிகராக வலம் வருபவர் நடிகரு ரஜினிகாந்த். தென்னிந்திய சினிமாவின் அசைக்கமுடியாத மாபெரும் நட்சத்திர ஜாம்பவனாக வலம் வருகிறார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

rajini
இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிகிறது, ஆரம்பகாலங்களில் வில்லனாக கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ரஜினி. இன்று தமிழ் சினிமாவிலேயே அதிக வியாபாரத்தை பெற்றுத்தரும் நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.
மேலும் நடிகர்களிலேயே அதிக சம்பளத்தை பெறும் நடிகராக உயர்ந்து நிற்கிறார். பல கோடிகளில் சம்பளமும் பல கோடிகளில் வியாபாரமும் உடைய சக்கரவர்த்தியாகவே வாழ்ந்து வருகிறார் ரஜினி. அந்த காலங்களில் தயாரிப்பாளரும் இயக்குனருமான எஸ்.பி.முத்துராமன் மற்றும் பஞ்சு அருணாச்சலம் ஆகியோருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் ரஜினி.

rajini
ஒரு சமயம் பஞ்சு அருணாச்சலம் படத்திற்காக ரஜினியின் கால்ஷீட் வாங்கப்பட்டு அப்பொழுதெல்லாம் வில்லனாக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.பிரியா என்ற அதிக பட்ஜெட் படத்தில் நடிப்பதற்காக ரஜினியிடம் கால்ஷீட் வாங்கப்பட்டது. இந்த படம் முழுவதும் சிங்கப்பூரில் எடுக்கப்படும் படம் என்பதால் ரஜினிக்கு ஒரே எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க :பொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவி மார்க்கெட்… ஒரு விளம்பரத்துக்கு மட்டுமே இத்தனை கோடி சம்பளமாம்…
அப்பொழுது ரஜினி 30000 தான் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். சிங்கப்பூர், அதிக பட்ஜெட் உள்ள படம் என்பதால் பஞ்சு அருணாச்சலத்திடம் எனக்கு 20000 சம்பளம் கொடுத்தால் போதும் என கூறினாராம். உடனே பஞ்சு அருணாச்சலம் ர்ஜினியை பார்த்து ‘பொழைக்க தெரியாத ஆளா இருக்கீயே? உன் மதிப்பு என்னனு உனக்கே தெரியல’ என்று கூறி

rajini
இந்த படத்திற்காக உனக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கலாம்னு நினைத்தேன். ஆனால் இப்பொழுது ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் சேர்த்துக் கொடுக்கிறேன் என்று அதிக சம்பளத்தை கொடுத்தாராம். இதை பஞ்சு 80 என தமிழ் சினிமா எடுத்த விழாவில் கலந்து கொள்ள முடியாத ரஜினி ஒரு வீடியோவாக இந்த தகவலை பகிர்ந்து அவருடைய வாழ்த்துக்களையும் சேர்த்து அனுப்பியிருந்தார்.