அந்த மாதிரி நடிக்க மாட்டேன்!.. ரஜினியா சொன்னது?.. என்ன படம் தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-03-23 13:26:35  )
rajini
X

rajini

ரஜினி என்றாலே மாஸ், ஆக்‌ஷன், ஸ்டைல் இதை பற்றி தான் அதிகமாக பேசியிருக்கிறோம். ஆனால் நல்ல நடிகர் என்பதை கடைசியில் தான் கூறுகிறோம். ஏனெனில் நடிப்பையும் தாண்டி ரசிகர்கள் அவரின் ஸ்டைலைத்தான் அதிகம் விரும்புகின்றனர்.

rajini1

rajini1

ஆனால் அவரின் நடிப்பிற்கு உதாரணமாக ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக 'முள்ளும் மலரும்', 'ஆறிலிருந்து அறுபதுவரை', 'எங்கேயோ கேட்ட குரல்' , 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'அவள் அப்படித்தான்', 'புவனா ஒரு கேள்விக்குறி' போன்ற படங்களை சொல்லலாம்.

மேலும் ஒரு படம் என்று எடுத்துக் கொண்டால் அதில் கண்டிப்பாக நகைச்சுவை காட்சிகள் இல்லாமல் இருக்காது. அதுவும் நகைச்சுவை காட்சிகளுக்கு என்று பிரத்யேகமான நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களை தாண்டி மற்ற நடிகர்களின் பங்களிப்பும் மிக அவசியம்.

rajini2

rajini2

அது ரஜினியிடம் அதிகமாகவே இருக்கின்றது. சிறந்த நகைச்சுவை மிக்க நடிகரும் கூட ரஜினிகாந்த். அதே போல செண்டிமெண்ட் காட்சிகளிலும் நடிக்கக் கூடியவர். இப்படி பட்ட ரஜினியை ஒரு காட்சியில் அழ வேண்டும் என்று சொன்னதுக்கு ரஜினி ‘அப்படியெல்லாம் நான் நடிக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

எந்தப் படம் தெரியுமா? ‘படையப்பா’ திரைப்படம் தான். அந்தப் படத்தில் சொத்துக்களை எல்லாம் இழந்து ஒரு குடிசை வீட்டில் குடும்பத்தோடு குடியேறும் ரஜினி தன் தங்கையாக நடித்திருக்கும் சித்தாராவுக்கு சாப்பாடு ஊட்டி விடும் போது சில வசனங்களை சொல்லி அழுது கொண்டே நடிக்க வேண்டும்.

rajini3

rajini3

இதை ரவிக்குமார் சொல்லும் போது நான் அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் ரசிகர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்ற காரணத்திற்காக.ஆனால் ரவிக்குமார் மிகவும் கெஞ்சி கேட்ட பின்னரே நடித்திருக்கிறார். ஆனால் அந்த காட்சி வரும் போது திரையரங்கில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனராம். இதை கே,எஸ்,ரவிக்குமாரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க :சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க பாஸ்… சூரியை போட்டு பாடாய் படுத்திய வெற்றிமாறன்… அடப்பாவமே!

Next Story