இந்த நடிகை எனக்கு வேண்டாம்!...அடம் பிடித்த ரஜினி..படப்பிடிப்பில் நடந்த களோபரம்....
80 களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் டூயட் போட்ட கனவு கன்னி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. இவர்
அந்த கால இளசுகள் நெஞ்சில் குடி போன அழகான மங்கை. மிகவும் சிறு வயதிலயே நடிக்க வந்தவர். அப்ப உள்ள
காலகட்டங்களில் காலத்திற்கேற்ப க்ளாமர் காட்டி நடித்தவர்.
படங்கள் போக போக நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் புரடியூஸ் பண்ணுனு சொல்லி அந்த வேலையில் இறங்கி மிகவும் நஷ்டப்பட்டிருக்கிறார் நடிகை நிர்மலா. அதன்பின் படவாய்ப்புகள் குறைய என்ன பண்றதுனு தெரியாமல் நிற்க குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
இதையும் படிங்கள்: எவனாவது கடத்திட்டு போயிட போறான்… காட்டுக்குள்ள தாறுமாறான லுக்கில் நடிகை….
அதுவும் நடிகர் ரஜினிக்கு அக்காவாக காளி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அதில் அக்காவாக பிரமாதமாக நடித்திருப்பார். அப்பவே ரஜினி செட்டிற்குள் வந்தால் ஒரே கிண்டல் கேலியுமாக இருப்பாராம். எல்லாரையும் கிண்டல் பண்ணுவாராம் என நிர்மலா கூறினார்.
அதன்பிறகு அருணாச்சலம் படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வர நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதுவும் ரஜினிக்கு மாமியாராக நடிக்கும் கதாபாத்திரத்தில். ரஜினி வந்து பாத்து இவங்க எனக்கு மாமியாரா? அதெல்லாம் முடியாது, இவங்க எனக்கு மாமியார்ன வேண்டாம் என கிண்டலாக சொல்ல சூட்டிங் ஸ்பாட்டே கலவரம் போல் ஆகிவிட்டதாம்.இதை நடிகை நிர்மலா மிகவும் வெட்கப்பட்டு கூறினார்.