மொத்த டிராஃபிக்கையும் க்ளியர் பண்ண ரஜினி!.. மும்பையில் மாஸ் காட்டிய தலைவர்.. எப்படி தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-04-27 00:22:01  )
rajini
X

rajini

தமிழ் சினிமாவில் ஒரு ஆகச்சிறந்த நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரஜினி. தன்னுடைய ஸ்டைலாலும் நடிப்பாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறார். தலைவராகவே ஏற்றுக் கொண்ட ரசிகர்களை ரஜினியும் என்றும் மறப்பதில்லை.

பொது இடங்களிலும் சரி சந்திக்கும் நேரங்களிலும் சரி ரசிகர்களுக்கு தேவையான மரியாதையையும் அன்பையும் வாரி வாரி வழங்கக் கூடிய ஒரு நல்ல கலைஞர் தான் ரஜினி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்ற அளவுக்கு அவரின் புகழ் ஓங்கி நிற்கின்றது.

தமிழ் மொழி சினிமா தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அனைத்து முன்னனி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து தன்னுடைய தனித்திறமையை காட்டி நிரூபித்து வருகிறார்.

இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்னரே கமல் ஒரு பீக்கில் இருக்கும் நடிகராக இருந்தார். ஆனால் இன்று அந்த கமலையே ஓவர் டேக் செய்து வசூலிலும் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் ஹிந்தி நடிகரான அனுபர் கேர் ரஜினியை குறித்து பேசிய செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது.

அனுபர் கேரும் ரஜினியும் சேர்ந்து ‘சால்பாஷ்’ என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தின் சூட்டிங் சமயத்தின் போது அனுபர் கேருக்கு ஒரு சிறிய அடி பட்டுவிட்டதாம். அவரை உடனே ரஜினி மருத்துவமனைக்கு தன்னுடைய காரில் ஏற்றி அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த சமயம் மும்பையில் டிராஃபிக் பீக்கில் இருந்த நேரமாம். அப்போது ரஜினி எதுவும் பேசாமல் கீழே இறங்கி நின்றிருக்கிறார். அதை பார்த்த மும்பை மக்கள் ரஜினிக்கு வழி விட்டிருக்கின்றனர். அவ்ளோதான் ரஜினி காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டாராம். மும்பையிலும் கெத்து காட்டிய ரஜினியின் இந்த சம்பவம் குறித்து நடிகர் அனுபம் கேர் சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க : யாரு படம் ஹிட்டுன்னு பார்த்துறலாம்!.. கமல்ஹாசனுக்கு டஃப் கொடுத்த சுந்தர்ராஜன்…

Next Story