அப்ப இதுவரைக்கும் நல்லா நடிக்கலையா.....? விமர்சனம் செய்த பிரபலத்தின் மீது பாய்ந்த ரஜினி..!
80 களில் ஆரம்பித்த தன் ஆட்டத்தை இன்னும் விடாமல் அதே உற்சாகத்தோடு தொடர்கிற ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி. தன் அற்புதமான ஸ்டைலால் ரசிகர்களை இன்னும் மகிழ்வித்து வருகிறார். மேலும் தனக்கென பாணியில் நகைச்சுவையோடு கதையை நகர்த்துவதில் வல்லவர்.
இவரின் கெரியரில் ஏகப்பட்ட படங்களை நம் நினைவுக்கு கொண்டு வரலாம். அந்த வகையில் மிகவும் பரவசத்தை ஏற்படுத்திய படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த முத்து என்ற படம். ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருப்பார்.மேலும் செந்தில், வடிவேலு உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படம் முழுக்க காமெடி கலந்த கமெர்ஷியல் படமாக ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் தன்னுடைய அனுபவத்தை சண்டை பயிற்சியாளர் கனல் கன்னன் அண்மையில் கூறியிருந்தார். ஒரு காட்சியில் ரஜினியை “ முத்து வீட்டை விட்டு வெளியே போ” என வெளியில் துரத்துவார்கள். ரஜினியும் அழுது கொண்டே போவார். அப்போது ரஜினி அழுது கொண்டே வரும்போது
கனல் கன்னன் சார் நீங்க நல்லா நடிச்சீங்கனு சொன்னாராம். உடனே கட் கட் என சொல்லி ஏன் இதற்கு முன்னாடி நான் நல்லா நடிக்கலையா என்று ரஜினி மிகவும் ஆவேசத்துடன் கேட்டதாக கனல் கன்னன் தெரிவித்தார். அதோடு மட்டுமில்லாமல் ரஜினி இயக்குனரிடமும் போய் சொல்ல அவர் வந்து கேட்க கனல் கன்னல் ஐய்யோ சார் நான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என கூறினாராம்.