3 கதைகள் ரெடி!.. இளம் இயக்குனரை டீலில் விட்ட ரஜினி...காத்திருந்தது வீணாப்போச்சே!....

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் அண்ணன் - தங்கை பாசம் கொண்ட செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.மேலும், இப்படத்தில் குஷ்பு, நயன்தாரா, மீனா, சூரி, சதிஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நீண்டநாட்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: தளபதி 66 பட வில்லனாக பிரபல ஹீரோ? – அவர் வந்தா ரணகளம்தான்!…
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, அவரின் இயக்கத்தில் நடிக்கவில்லை எனத்தெரிகிறது. ரஜினி 3 பெரிய இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். அவர்கள் கூறிய கதைகளில் ஏதோ ஒன்றில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு பின் வேறு எந்த படத்தையும் தேசிங்கு பெரியசாமி நடிக்கவில்லை. ரஜினிக்காக கதை தயார் செய்து காத்திருந்தார்.
ஆனால், பெரிய பட்ஜெட் படம் என்பதால் அவர் தாங்குவாரா என்கிற சந்தேகம் ரஜினிக்கு ஏற்பட்டதாம். எனவேதான், அதை கிடப்பில் போட்டுவிட்டு வேறு இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
அண்ணாத்த படம் வெளியான பின் யார் இயக்கத்தில் நடிப்பது என ரஜினி முடிவுசெய்யவுள்ளார்.