ரஜினி பர்ஷனலா சொன்னதை பப்ளிசிட்டியாக்க நினைத்த இயக்குனர்! சூப்பர் ஸ்டாரா கொக்கா?

by Rohini |   ( Updated:2025-05-03 23:21:51  )
rajini (1)
X

rajini (1)

Rajini: தமிழ் சினிமாவில் இன்று ஒரு லட்சிய நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ரஜினி தற்போது கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெயிலர் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைய அதன் இரண்டாம் பாகம் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் .ஏற்கனவே அவர் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதற்கு அடுத்தபடியாக ஜெயிலர் 2 திரைப்படத்தின் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினியை பொறுத்த வரைக்கும் கதைகளில் ஆர்வம் காட்டக்கூடியவர். எந்த ஒரு படங்கள் ரிலீஸ் ஆனாலும் அதை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட பட குழுவினரை அழைத்து அந்த படத்தின் கதை பற்றி விவாதித்து அதில் இருக்கும் நிறை குறைகளை சொல்வது ரஜினியின் வழக்கம். இதனாலையே படம் எடுக்க வரும் புது முக இயக்குனர்கள் தன் படத்தை பார்த்து ரஜினி கூப்பிட மாட்டாரா என ஏங்கிப் போய் இருக்கின்றனர் .அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி அந்த நேரத்தில் சசிகுமாரையும் அந்த படத்தின் இயக்குனர் பிரபாகரனையும் தன் வீட்டிற்கு அழைத்து படத்தின் கதையை பற்றி விவாதித்து பேசினார்களாம்.

அப்போது சசிகுமாரிடம் ரஜினி இப்போது நீங்கள் ஹீரோ மெட்டீரியல் ஆகி விட்டீர்கள். அதனால் உங்களுடைய ஒவ்வொரு படம் கிளைமாக்ஸில் மக்களை சந்தோஷப்படுத்துகிற மாதிரியான காட்சிகளை வைத்து முடித்தால் நன்றாக இருக்கும். வெட்டுக்குத்து ,அடிதடி இந்த மாதிரி காட்சிகளை வைக்காமல் இப்படியான ஒரு காட்சிகளோடு முடித்தால் மக்கள் படத்தை பார்த்துவிட்டு சந்தோசமாக செல்வார்கள் .இனிமேல் அது தான் உங்களுக்கு நன்றாக இருக்கும் என கூறினாராம் ரஜினி. கிட்டத்தட்ட 2:30 மணி நேரம் இந்த கதையைப் பற்றி பல விஷயங்களை பேசி இருக்கிறார் ரஜினி.

பேசி முடித்துவிட்டு வெளியில் வந்து விட்டார்களாம் சசிகுமாரும் பிரபாகரனும். அப்போது இயக்குனர் பிரபாகரன் சசிகுமாரிடம் ரஜினி சொன்ன இந்த விஷயங்களை நாம் விளம்பரப்படுத்தினால் நம் படத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறினாராம். அதற்கு சசிகுமார் இது மிகவும் தவறு .அவர் நமக்கு பர்சனல் ஆக இந்த விஷயங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார். அதை நாம் காசுக்காக பப்ளிசிட்டி பண்ண வேண்டும் என நினைப்பது மிகப்பெரிய தவறு. அதை ஒருபோதும் செய்யக்கூடாது என கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனர் வற்புறுத்தி கேட்டுக் கொண்டே இருந்தாராம் .சசிகுமார் ஒரேடியாக முடியவே முடியாது என மறுத்து விட்டாராம்.

இவர்கள் பேசிய இந்த விஷயங்கள் சில நாட்களுக்குப் பின் ரஜினிக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் அதை அந்த நேரத்தில் கேட்கவில்லையாம் ரஜினி. ஆனால் சசிகுமாரின் இந்த பெருந்தன்மை ரஜினிக்கு பிடித்துப் போக இதன் காரணமாகத்தான் பேட்ட படத்தில் சசிகுமார் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை நடிக்க வைத்திருக்கிறார் ரஜினி. அந்த படப்பிடிப்பு நேரத்தில் தான் இந்த சம்பவத்தை பற்றி ரஜினி சசிகுமாரிடம் பேசினாராம். இதைக் கேட்டதும் சசிகுமாருக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம் .இந்த விஷயம் தெரிந்திருந்தும் அந்த நேரத்தில் நம்மை கூப்பிட்டு எதுவும் கேட்கவில்லையே .தப்போ சரியோ அதை பற்றி எதுவுமே கேட்கவும் இல்லை .இந்த அளவு ஒரு நேர்மையான மனிதராக இருக்கிறாரே ரஜினி என சசிகுமார் தன் மனதில் நினைத்துக் கொண்டாராம். இந்த ஒரு தகவலை செய்தியாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story