இத்தனை திரைப்படங்களா?.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே?..சிவாஜி ரஜினி இணைந்து நடித்த படங்கள்!..
தமிழ் சினிமாவில் நடிப்பு ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடகங்களில் ஜொலித்து வந்தவர் பின்னர் சினிமாவில் பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெளிவான உச்சரிப்பு, நேர்த்தியான நடிப்பு என ஒரு நடிப்பு பல்கலைக் கழகமாகவே விளங்கினார்.
அவரை பின்பற்றி அடுத்த தலைமுறை நடிகர்களும் சினிமாவிற்குள் நுழைந்தனர். அந்த வகையில் ரஜினி சிவாஜி மீது அலாதி பிரியம் கொண்டவராக விளங்கினார். இருவரும் இணைந்து பின் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கினர். சிவாஜி, ரஜினி என்றாலே நம் நினைவுக்கு வருவது ‘படையப்பா’ படம் மட்டும் தான். ஆனால் அதற்கு முன்பாகவே ஒரு சில படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
உருவங்கள் மாறலாம்: ரமணன் இயக்கத்தில் ஒய்.ஜி,மகேந்திரன் நடிப்பில் வெளியான படம் தான் உருவங்கள் மாறலாம் என்ற திரைப்படம். இந்தப் படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக சுஹாசினி நடித்திருப்பார். சிவாஜி கணேசனுடன் ரஜினியுன் இணைந்து இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். 1983 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கடவுளை மையமாக எடுக்கப்பட்ட படமாக அமைந்தது.
விடுதலை: 1986 ஆம் ஆண்டு வெளியான இந்த விடுதலை திரைப்படத்தை கே.விஜயன் இயக்கியிருந்தார். இதில் சிவாஜி கணேசன், ரஜினி, மாதவி போன்றோர் நடித்திருந்தனர். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகப்பெரும் தோல்வியை தழுவியது. பாலாஜி தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
நான் வாழ வைப்பேன் : தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் 1979 ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் சிவாஜி கணேசனுடன் ரஜினி, கே.ஆர்.விஜயா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஜஸ்டிஸ் கோபிநாத் : இந்தப் படத்தையும் தா.யோகானந்த் தான் இயக்கியிருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்திலும் சிவாஜி, ரஜினியுடன் கே.ஆர்.விஜயா தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சிவசங்கரன், வள்ளி மணாளன் பிக்சர்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
படிக்காதவன் : அநேக பேருக்கு பரீட்சையமான படங்களில் இந்தப் படமும் ஒன்று. அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இதில் சிவாஜியும் ரஜியும் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படித்திருப்பர்.
படையப்பா : கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா படம் தான் சிவாஜிக்கு கடைசியாக அமைந்த படமும் கூட. அப்பா கதாபாத்திரத்தில் சிவாஜி மெருகேற்றியிருப்பார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரனியின் கெரியரில் வசூலை அள்ளியப் படமாக படையப்பா படம் அமைந்தது. பெரும்பாலும் படிக்காதவன் மற்றும் படையப்பா படங்கள் மட்டும் தான் ரஜினி சிவாஜியின் நடிப்பில் நம் நினைவுக்கு வரும் படங்களாகும். ஆனால் கிட்டத்தட்ட 6 படங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : என்னக் கண்டாலே அந்த நடிகைக்கு ஆகாது!.. மனம் திறக்கிறார் பாண்டியராஜன்!..