Connect with us
rajinikanth

Cinema History

இரவு முழுவதும் காரிலேயே தூங்கிய ரஜினி!.. கொதித்தெழுந்த பி.வாசு.. அந்த அட்வைஸ்தான் ஹைலைட்!..

ரஜினியின் அறிமுகம்:

நடிகர் ரஜினி சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், பல வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பழசை மறக்காத ஒரு மனிதர். பல மேடைகளில் இவர் தனது பழைய வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார். கர்நாடகாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து சினிமா ஆசையில் சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் பயிற்சி எடுத்து பாலச்சந்தர் கண்ணில் பட்டு நடிகரானவர்.

rajini

சினிமாவில் தொடக்க காலத்தில் பல அவமானங்களை அவர் சந்தித்துள்ளார். அதையெல்லாம் தாண்டித்தான் அவர் சூப்பர் ஸ்டாராக மாறினார். அவமானங்களை படிக்கல்லாக வைத்து அதன் மீது ஏறி இலக்கை தொட்டவர் இவர். இப்போதுவரை சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். வயசானாலும் சிங்கம் சிங்கம்தான் என சொல்வது போல் ஜெயிலர் படத்தில் கர்ஜித்துள்ளார்.சினிமா படப்பிடிப்பிலும் ரஜினி மிகவும் எளிமையாகவே இருப்பார். இதுபற்றி பல செய்திகள் வெளிவந்துள்ளது. இப்போது ஒரு புதிய செய்திபற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

இதையும் படிங்க: சினிமாவே வேண்டாம்!.. பொன்னம்பலம் எடுத்த முடிவு.. களத்தில் இறங்கி காரியம் சாதித்த விஜயகாந்த்…

ulaipali

உழைப்பாளி:

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ரோஜா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்து 1993ம் வருடம் வெளியான திரைப்படம் உழைப்பாளி. இப்படத்தின் சில காட்சிகள் கர்நாடகாவில் எடுக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பிற்காக படக்குழு சிக் மங்களூர் சென்றுள்ளது. சில தவறுகளால் ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்படவில்லை.

vasu

vasu

எனவே, படக்குழுவினருக்கு தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, அன்று இரவு முழுவதும் ரஜினி தனது காரிலேயே தூங்கினாராம். இதனால் கொதித்தெழுந்த வாசு ஹோட்டல் நிர்வாகத்திடம் சென்று ‘ரஜினி யார் தெரியுமா?.. எப்பேற்பட்ட நடிகர் தெரியுமா?.. ஒரு சூப்பர்ஸ்டாருக்கு அறை இல்லையா?’ என சண்டை போட அவரை சமாதானம் செய்த ரஜினி ‘நாம் யார் என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.. நாம் சொல்லக் கூடாது. இது ஒரு சிறிய தவறால் நடந்தது. தவறு நம் பக்கம். இதை பெரிதாக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டாரம்.

அதன்பின் எங்கு சென்றாலும் பி.வாசு தன்னை யார் என சொல்லி சுயதம்பட்டம் அடித்து கொள்ளமாட்டாராம்.

இதையும் படிங்க: தள்ளாடுற வயசுல துள்ளி ஆட ஆசை! டிவி நடிகையிடம் உல்லாசமாக இருந்த அரசியல் பிரபலம்

google news
Continue Reading

More in Cinema History

To Top