போயஸ் கார்டனில் தான் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதே பகுதியில் சமீபத்தில் நடிகர் தனுஷ் கூட ஒரு வீடு வாங்கினார். பல பிரபலங்கள் போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகின்றனர்.
அதே பகுதியில் தான் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமும் இருந்தது. அந்த சமயத்தில், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தபோது, ரஜினி ஓவ்வொரு முறை வெளியே சென்ற போதும், அவரை போலீசார் தடுத்ததால், ஒருமுறை ரஜினிகாந்த் கடுப்பாகிவிட்டார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க- அந்த சீன் இருக்குறதயே மறந்து படம் பார்க்க வரச் சொன்ன இயக்குனர்! படத்தை பார்த்த ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?
இந்த சம்பவம் குறித்து டாக்டர் கந்தரஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வீடு இருந்த சாலை வழியாக யாருமே செல்லமுடியாது. சுற்றி தான் செல்ல முடியும். எல்லா நேரமும் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிக் தடுத்து நிறுத்தி பல கேள்விகளை கேட்பார்கள். ரஜினியின் வீடு பக்கத்திலேயே இருந்ததால், அவரால் எங்குமே செல்ல முடியமால் போனது.
ஒவ்வொரு முறையும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் படியும், சுற்றி செல்லும் படியும் இருந்ததால், ஒரு முறை ரஜினி மிக கடுப்பாகிவிட்டார். காரைவிட்டு வெளியே இறங்கி வந்த ரஜினி நடு ரோடு என்றும் பார்க்காமல், அருகில் இருந்த ஒரு பெஞ்ச்சை போட்டு அதில் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.
போலீஸ் அதிகாரிகள் பயத்தில் வந்து கெஞ்சியுள்ளனர். பல மணி நேரம் ஆகியும் போராட்டம் செய்வது போல அங்கேயே உட்கார்ந்துவிட்டார். ரசிகர்கள் கூடி விட்டால், அல்லது ரஜினிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால் என பாதுகாப்பில் இருந்த போலீசார் பயந்துவிட்டனர்.
போலீசார் வந்து கெஞ்சி சமாதானம் செய்த பிறகு தான் அங்கிருந்து நகர்ந்தார். அதன் பிறகு தான் அவரால் நிம்மதியாக வெளியே சென்று வர முடிந்தது. அப்போதிலிருந்தே, ரஜினி ஜெயலலிதாவின் மீது கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது என்று டாக்டர் கந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- ரஜினி இப்படி ஆனதே அவங்களாலதான்!.. தம்பியை நினைத்து புலம்பிய சத்தியநாராயண ராவ்!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…