
Cinema History
ரஜினிகிட்ட இத கொண்டு போகாதீங்க.! அப்புறம் தனுஷ் பட இயக்குனர் நிலைமை தான் உங்களுக்கும்.!
தமிழ் சினிமாவில் நடக்கும் இந்த நம்பர் 1, நம்பர் 2 சண்டைகளுக்குள் சிக்காமல் அப்போதும், இப்போதும், எப்போதும் நான் சூப்பர் ஸ்டார் ஒன் என கெத்து காட்டி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்பம் முதலே இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் பக்கா கமர்சியல் படங்களாக தான் இருக்கும்
இவரது நடிப்பு பாணியை தான் உச்ச நட்சத்திரம் முதல், அந்த இடத்திற்கு வர ஆசைப்படும் இளம் நடிகர்கள் வரை கடைபிடித்து வருகின்றனர். இவர் கதை கேட்கும் பாணியே வித்தியாசமாக இருக்குமாம். பெரிய பணக்கார வீட்டு பையன், கோடீஸ்வரன், பெரிய அரசியல்வாதி என்றெல்லாம் கதை கேட்க மாட்டாராம். உழைப்பவர்களின் கதாபாத்திரமாக தான் இருக்க வேண்டும் என அதற்கேற்றாற் போல தான் படங்களை தேர்வு செய்வாராம்.
அப்படி தான், ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதனை மறுத்துவிட்டார் ரஜினி. அதிலும் இறுதியாக அவர் முதல்வராவது போல காட்டியது ரஜினிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதே போல தான் இன்னோர் சம்பவம் நடந்துள்ளது. தனுஷை வைத்து திருடா திருடி எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி முதல் படத்தில் கவனம் ஈர்த்தவர் சுப்பிரமணியம் சிவா. இந்த படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன ரஜினி, சிவாவிடம் கதை கேட்டுள்ளார். அவரும் ஓர் கதை கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – ரசிகர்களை ஏமாற்றப்போகும் டான் சிவகார்த்திகேயன்.!? படத்தில் அது சுத்தமாக கிடையாதாம்.!
சரபோஜி என தலைப்பு கூட வைத்தாகியாயிற்று, ஆனால் படத்தின் கதை படி ஹீரோ விவசாயி. விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனை இறுதியில் ஹீரோ முதலமைச்சராக ஆவது போல இருந்ததாம். எல்லாம் ஓகே ஆனால் முதமைச்சராவது வேண்டாம் என நினைத்த ரஜினி சில காட்சிகளை படத்தில் இருந்து மாற்ற சொல்லியுள்ளாராம்.
ஆனால், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அப்படி செய்தால் படத்தின் ஜீவன் கெட்டுவிடும் என கூறிவிட்டாராம். இதன் காரணமாக சுப்பிரமணியம் சிவாவுக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டதாம்.