பசியில மயக்கமே வந்துடுச்சி!.. இவ்வளவு அசிங்கப்படணுமா?... கவுண்டமணியிடம் புலம்பிய ரஜினிகாந்த்..
Rajinikanth: ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்பகாலங்களில் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த நேரத்துக்கும் இந்த ஜெய்லர் படத்தின் வெற்றிக்குமே ஒரு தொடர்பு இருக்கிறதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பல கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். அவரிடம் பல கார்கள் அணிவகுத்து நிற்கின்றது. ஆனால் கூட ஜெய்லர் படத்தின் வெற்றிவிழாவில் இப்போது தான் பணக்காரராக ஃபீல் செய்வதாக பேசி இருந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…
இதை கேட்ட பலரும் இப்போது ஜெய்லர் படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி ஏன் இத்தனை எமோஷனலாகி பேச வேண்டும் என பலர் கிசுகிசுத்தனர். ஒரு கார் கொடுத்ததற்கா இத்தனை பில்டப் செய்ய வேண்டும் எனவும் பேச்சுகள் எழுந்தது. ஆனால் இந்த பேச்சுக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறதாம்.
ரஜினியின் ஆரம்பகாலங்களில் அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம். கம்பெனியின் காரில் தான் சினிமா ஷூட்டிங்கிற்கு செல்வாராம். 16 வயதினிலே பட சமயத்தில் கூட கவுண்டமணியை ஆழ்வார்பேட்டையில் இறக்கிவிட்டு தான், ரஜினிகாந்தினை மியூசிக் அகாடமியில் இறக்கி விடுவார்களாம்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவோடு ஜோடியா நடிச்சு என்ன பிரயோஜனம்? விஜயகுமாருக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கா?
கடைசியாக வீட்டுக்கு போகும் நேரத்தில் பசி மயக்கமே வந்துவிடுமாம். இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து வருவாராம். தானும் நன்றாக சம்பாரித்து சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும். இதுதான் தன்னுடைய ஆசை என கவுண்டமணியிடம் புலம்பி இருக்கிறார்.
அப்படி கஷ்டப்பட்ட ரஜினி தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கிறார். இதனால் தான் ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து வந்த காரை மிகப்பெரிய சொத்தாக நினைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.