Cinema News
இந்த மூணுக்கும் அடிமையாகிடாதீங்க!.. மிகவும் மோசமாக இருந்த என்னை மாத்தினதே இவங்கதான்.. ரஜினி பெருமிதம்..
தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த். இதுவரை நான் என்ன செய்துள்ளேன்? ஆனால் தமிழ் மக்கள் என் மேல் இவ்ளோ பாசம் வைத்துள்ளார்கள் என்று அவரே பெருமைபடும் அளவிற்கு ரஜினி மீது தீராத அன்பு வைத்திருக்கின்றனர்.
நடிகர்களிலே அதிக ரசிகர்களை கொண்டவராக ரஜினி விளங்குகிறார். அவரின் ஆன்மீகம், பொறுமை, பகுத்தறிவு சிந்தனை, என அனைத்திலும் மக்கள் அசந்துதான் போனார்கள். மேடைகளில் பேசும் போது மக்கள் எப்படி இருக்க வேண்டும், தன் ரசிகர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவ்வப்போது அறிவுரைகளை வழங்குவார்.
இதையும் படிங்க : இந்த குழந்தைக்கும் ‘சின்னத்தம்பி’ படத்துக்கும் முக்கிய சம்பந்தம் இருக்கு!.. சிவாஜியே ஆச்சர்யப்பட்ட ரகசியம்…
அந்த வகையில் சமீபத்தில் ஒரு விழா மேடையில் பேசிய போது தனது பால்ய காலத்தில் எப்படி இருந்தேன் என்பதையும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதையும் தன்னை இந்த பழக்கத்திலிருந்து மீட்ட ஒருவரைப் பற்றியும் மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சினிமாவிற்கு வருவதற்கு முன் பேருந்து நடத்துனராக இருந்த ரஜினி ஒரு நாளைக்கு இரு வேளைகளில் அசைவம் தான் சாப்பிடுவாராம். அதுவும் காலையிலேயே பாயாவும் ஆப்பமும் தான் அதிகம் சாப்பிட்டிருக்கிறாராம். தினமும் சிக்கன் இல்லாமல் சாப்பாடே இறங்காதாம். இதனுடன் குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது.
ஒரு நாளைக்கு 100க்கும் மேல் சிகரெட் சாப்பிட்டிருக்கிறாராம். சைவம் சாப்பிடுகிறவர்களை பார்த்தாலே பாவமாக இருக்கும் என்றும் எப்படி இந்த சைவ சாப்பாட்டை தினமும் சாப்பிடுகிறார்கள் என்று அவர்களை பார்த்து வேதனை பட்டதுண்டு என்றும் அந்த மேடையில் கூறினார். அவர் சொல்ல சொல்ல பின்னாடியில் இருந்தவர்கள் சிரித்தனர்.
அதன் பின் என்னை முழு மனிதனாக மாற்றியதே என் மனைவி லதா தான் என்று மிகவும் பெருமையாக கூறினார். மேலும் அவர் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றும் தெரிந்தும் ஆன்மீகம், மருத்துவம் என அந்தப் பாதைகளில் என்னை அழைத்துக் கொண்டு போய் மாற்றினார். ஒரு மனிதன் மது, சிகரெட், அசைவம் இந்த மூணுக்கும் அடிமையாகி விட்டான் என்றால் அவனது ஆயுட்காலம் நிச்சயமாக 60ஐ தாண்டாது. ஆகவே இந்த மூன்றுக்கும் அடிமையாகி விடாதீர்கள் என்று தன் ரசிகர்களுக்கு கூறினார் ரஜினி.