ரஜினிக்கு தொடர்ந்து அம்மாவாக நடித்து தோல்வியை சந்தித்த படங்கள்......! யார் அந்த நடிகை தெரியுமா...?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக உச்ச நடிகராக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80களில் ஆரம்பித்த இவரது ஆட்டம் இன்று வரை தளராமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஏகப்பட்ட ஹீரோயின்கள் எல்லாம் இவரை கடந்து சென்று விட்டனர்.
ஸ்ரீதேவி, மாதவி, ஸ்ரீபிரியா, ராதா, அம்பிகா என பல அழகான நடிகைகள் எல்லாருமே இவருடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட காலம் எல்லாம் கண்முன் நிற்கின்றது. இன்று அவர்கள் இவரின் நடிப்பை பார்த்து அசந்து போய் நிற்கின்றனர்.
இதையும் படிங்கள் : சிவாஜியின் சம்பளத்தை டிஃபன் கேரியரில் கொடுத்தனுப்பிய பிரபல நடிகர்…!சும்மா இருப்பாரா நடிகர் திலகம்…?
இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஹீரோயினாக நடித்த நடிகை எல்லாம் ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. குறிப்பிட்டு சொன்னால் நடிகை சுஜாதா. ஒரு காலத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின் உழைப்பாளி, மாவீரன், கொடி பறக்குது போன்ற படங்களில் தொடர்ந்து ரஜினிக்கு அம்மாவாக நடித்தார்.
ஆனால் இவர் ரஜினிக்கு அம்மாவாக நடித்த எல்லா படங்களுமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. மீண்டும் அம்மாவாக நடிக்க மாட்டார் என நினைத்துக் கொண்டு இருந்த போது பாபா படத்திலும் அம்மாவாக நடித்தார். அந்த படமும் தோல்வியை எட்டியது.