யாருமே செய்யாத காரியம்!. திரையுலகையே ஆச்சரியப்பட வைத்த ரஜினி..
தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை தன் கொள்கைகளிலும் கோட்பாடுகளிலும் ஒரே மாதிரியாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த். இவரை பற்றி பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையே இருந்து வருகிறது. தன்னுடைய அறிவுரைகளாலும் ஆன்மீகத்தாலும் அனைவரையும் ஈர்த்து வருகிறார் ரஜினிகாந்த்.
ஆன்மீகத்தில் மூழ்கிய ரஜினி ஒரு சமயம் இமயமலை சென்று திரும்பிய போது தான் ‘பாபா’ படம் உருவானது. அதுவும் அவரின் தயாரிப்பிலேயே அந்தப் படம் உருவானது. படம் தயாரான போது படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தது. அதுவும் அவர் இந்த படத்தை அவரின் மனதிருப்திக்காக எடுத்தப் படமாகும்.
படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படத்திற்காக ஸ்கிரீன் ப்ளே, கதை எல்லாம் ரஜினிதான். மிகவும் ஆசைப்பட்டு எடுத்தப் படம் என்றைக்கும் இல்லாத பெரும் தோல்வியை தழுவியது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த நிலையில் ரஜினி வினியோகஸ்தரர்கள் அடைந்த நட்டத்தை ரஜினியே சரி செய்தார். பிரபல தயாரிப்பாளரான ஆனந்தம் எல்.சுரேஷிடம் ரஜினி ‘இன்னும் 5 நாள்களில் வினியோகஸ்தரர்கள் அடைந்த நஷ்டத் தொகையை முழுவதுமாக கணக்கிட்டு என்னிடம் வந்து லிஸ்ட் கொடுக்கவும்’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் அந்த 5 நாள் கூட பொறுக்க முடியாத ரஜினிக்கு டென்ஷன் அதிகமாகிவிட்டதாம். உடனே எல்.சுரேஷுக்கு போன் செய்து ஒரு நாளில் லிஸ்ட் வேண்டுமென சொல்லியிருக்கிறார்.உடனே லிஸ்டையும் கொடுக்க அனைத்து வினியோகஸ்தரர்களுக்கும் அடைந்த நட்டத்தை இவர் பணம் கொடுத்து சரி செய்திருக்கிறார்.
அதுவும் போக எல்.சுரேஷிடம் ‘ நீங்களும் வினியோகஸ்தரர்களுக்கு முதலீடு செய்திருப்பீர்கள் அல்லவா? அதனால் உங்களுக்கு கொஞ்சம் லாப தொகையையும் கொடுக்கிறேன்’ என்று அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறு தொகையை லாபமாகவும் கொடுத்திருக்கிறார். இதை பற்றி எல்.சுரேஷ் ஒரு பேட்டியில் கூறும்போது ரஜினி செய்த இந்த செயல் இதுவரை சினிமா துறையில் யாரும் செய்யாத செயலாகும் என்றும் அகில அளவில் யாரும் செய்ததில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க : எம்ஜிஆர் சொன்ன வார்த்தை.. கோபத்தில் வெளியேறிய சௌகார்!.. துவம்சம் செய்த ஜெயலலிதா..