நடிகையின் நடிப்பை பார்த்து மிரண்ட ரஜினி! ‘தளபதி’ படம் உருவாக காரணமே இவங்கதானா?

by Rohini |
rajini
X

rajini

Actor Rajini: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அன்றிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களை தன் பக்கம் வைத்திருப்பவர். எங்கு இருந்தோ வந்து இன்று தமிழ்நாட்டை ஆளும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருக்கிறார் என்றால் அவர் மீது எந்த அளவு ரசிகர்கள் வெறியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இதன் காரணமாகவே அவர் அரசியலுக்கும் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை சுக்கு நூறாக்கினார் ரஜினி. இருந்தாலும் தன் படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவோம் என 73 வயது ஆனாலும் இன்று வரை அதே ஒரு தெம்புடன் படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அவரை போல யாரும் இல்லை!.. எஸ்.பி.பி பற்றி பாடகி சித்ரா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!..

இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் தளபதி. அந்த படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம் பற்றி சமீபத்தில் ஒரு இயக்குனர் பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் ரேவதி, ரகுவரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. அந்த திரைப்படத்தில் அஞ்சலி பாப்பாவாக பேபி ஷாமிலி நடித்திருப்பார்.

anjali

anjali

அந்த படத்தில் அவர் நடிக்கும் போது ஷாமிலிக்கு இரண்டு வயது தான். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் பட விழாவிற்கு கலந்து கொண்டு ரஜினி பேசியபோது மேடையில் மணிரத்தினத்தை பார்த்து அந்த இரண்டு வயது குழந்தையையே இந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் படத்தில் நானும் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை வைத்தும் படம் எடுப்பீர்களா? என்ற ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். இங்கிருந்து ஆரம்பமானது தான் தளபதி படம். இது ரஜினியே கேட்டு நடித்த திரைப்படம் என அந்த இயக்குனர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:பாக்கியாவுக்கு வந்த புது ஆப்பு… காபிக்காக ஈஸ்வரியை கத்தவிட்ட ராதிகா… இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ?

Next Story