படம் ஓடுமான்னு சந்தேகப்பட்ட பிரபு!.. சொல்லி அடித்த ரஜினி!. அட அந்த படமா?!..

prabu
Actor rajini: திரையுலகை பொறுத்தவரை ஹீரோவாக நடிக்க துவங்கியது முதல் வெற்றியை மட்டுமே கொடுத்து சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடிக்கும் படமெனில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். மிகவும் அரிதாகத்தான் அவரின் சில படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் போனது.
ரஜினி மிகவும் ரசித்து, பிடித்து, அவரே கதை, திரைக்கதை எல்லாம் எழுதி கண்டிப்பாக வெற்றி பெறும் என நினைத்து உருவாக்கிய திரைப்படம்தான் பாபா. ஆனால், அந்த படம் வெற்றியை பெறவில்லை. இது ரஜினிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்து அவரை அப்செட் ஆக்கியது.
இதையும் படிங்க: எஸ்கேவுக்கு செம டஃப் கொடுப்பார் போல தெரியுதே!.. செல்லம்மாவுடன் சுத்துனதே ஹீரோயினாக்கத்தானா கவின்?
முதன்முறையாக தனது படம் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து அந்த நஷ்டத்தை ரஜினி அவர்களுக்கு திருப்பி கொடுத்தார். இது அவரின் போட்டி நடிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. சில நடிகர்கள் பாபா பட தோல்வியை பார்ட்டி வைத்து கொண்டாடியதாக கூட செய்திகள் வெளியானது.
இனிமேல் ரஜினி அவ்வளவுதான்.. இனிமேல் அவர் சூப்பர்ஸ்டார் இல்லை என திரையுலகில் பேச துவங்கிவிட்டனர். எனவே 2 வருடங்கள் திரையுலகில் எந்த விழாவிலும் ரஜினி கலந்துகொள்ளாமல் இருந்தார். அதன்பின் அவர் பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிக்க நினைத்த திரைப்படம்தான் சந்திரமுகி.
இதையும் படிங்க: சம்பளமே வாங்காம ரஜினி நடிச்ச படம்!.. இனிமே அப்படி ஒரு பாட்டு அமையவே அமையாது!..
இந்த பட அறிவிப்பு வெளியானதும், ‘இந்த படம் ஓடாது.. ரஜினி அவ்வளவுதான்’ என பலரும் பேச துவங்கினர். இது ரஜினியின் காதுக்கும் போனது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி ‘விழுந்தா எழுந்திருக்க முடியாம இருக்க நான் ஒன்னும் யானை இல்ல.. குதிரை’ என பேசினார். இந்த படத்தை மகிழ்ச்சியுடன் துவங்கினாலும் படம் ஓடுமா என்கிற சந்தேகம் அப்படத்தின் தயாரிப்பாளர் பிரபுவுக்கு ஏற்பட்டது.

chandramuki
படம் முடிந்த பார்த்த ரஜினி ‘பிரபு.. முதல் வாரம் இந்த படம் சரியாக வரவேற்பை பெறாது. ஆனால், மெல்ல மெல்ல பிக் அப் ஆகி படம் சூப்பராக ஓடும்’ என சொன்னாராம். அவர் சொன்னபடியே சந்திரமுகி படம் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷை போல அஜித்தை மாற்றுவாரா வெற்றிமாறன்?!.. இனிமே வேற ரூட்டில் பயணிப்பாரா ஏகே?…