அழகா இருக்கீங்க! உங்கள கட்டிக்கப் போறவன் குடுத்து வச்சவன் - ரஜினி சொன்ன அந்த நடிகை

by Rohini |
rajini
X

rajini

Actor Rajini: சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்பதைப் போல யாரைக் கேட்டாலும் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். ஒட்டுமொத்த மக்களின் செல்வாக்கை பெற்றவராக இன்று ஒர் மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 50 வருடங்களை கடந்தும் இன்றும் ஒரு டாப் ஹீரோவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இன்றைய தலைமுறை நடிகர்களான அஜித் , விஜய் இவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி வசூலில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார் ரஜினி.

இதையும் படிங்க: நீ வந்து நின்னாலே மஜாதான்!. கட்டழகை வேறலெவலில் காட்டும் இந்துஜா ரவிச்சந்திரன்…

பைரவி என்ற படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார் ரஜினி. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீபிரியாதான் நடித்தார். அந்த நேரத்தில் ஸ்ரீபிரியா மிகவும் பிஸியான நடிகையாக இருந்து வந்தார். அதனால் ஸ்ரீபிரியா தனக்கு ஜோடி என்றதும் கொஞ்சம் பதற்றமாக இருந்தாராம் ரஜினி.

ரஜினியுடன் அதிக படங்களில் நடித்த நடிகையும் ஸ்ரீபிரியாதான். ஆனால் இன்று ரஜினியின் வளர்ச்சி யாரும் எட்ட முடியாத வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் அண்ணாமலை படத்தில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகின்றது.

இதையும் படிங்க: எல்லாமே கலர்புல்!. செம ஆஃபர்!.. எதிர்நீச்சல் ஜான்சி ராணி செய்த சூப்பர் ஹாப்பிங்!.. வீடியோ பாருங்க!…

அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருப்பார். அப்போது வயதான கதாபாத்திரத்தில் ரஜினியும் குஷ்பூவும் நடிக்க குஷ்பூ வயதான கெட்டப்பில் ஸ்பாட்டிற்கு வந்தாராம். ரஜினி குஷ்பூவையே பார்த்துக் கொண்டே இருந்தாராம்.

அதற்கு குஷ்பூ ஏன் அப்படியே பார்க்கிறீர்கள்? என்று கேட்க, அதற்கு ரஜினி உங்களை கல்யாணம் செய்யப் போறவன் ரொம்பவும் குடுத்து வச்சவன். வயதான கெட்டப்பிலும் அழகாக இருக்கீங்க என்று குஷ்பூவை பார்த்து சொன்னாராம் ரஜினி. அந்த குடுத்து வச்சவர் சுந்தர் சிதான் என அப்போது யாருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: அட என்னப் போல யார் மச்சான்? சைலண்டா இருந்து கப்-அ கவ்விய காஜல் அகர்வால் – என்ன மேட்டர் தெரியுமா

Next Story