Connect with us
rajinikanth

Cinema History

ஹீரோவ மட்டும்தான் கவனிப்பீங்களா?… மேக்கப் மேனிடம் ரஜினி சொன்ன அந்த விஷயம்…

Rajinikanth: தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலினாலும் நடிப்பினாலும் தனி இடத்தை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாகவே சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாகவே நடிக்க தொடங்கினார்.

பின் மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற திரைப்படங்களிலும் வில்லனாகவே நடித்திருந்தார். இவ்வாறு நடித்த ரஜினிக்கு பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் தனது நடிப்பின் மூலம் இன்று சூப்பர் ஸ்டார் எனும் பெயரையும் சம்பாதித்தார்.

இதையும் வாசிங்க:டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?… நிவாரண பொருட்கள் வழங்கும் இடத்தில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு!…

இவர் நடித்த எந்திரன், ஜெயிலர் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வசூலையும் பெற்று தந்தன. மேலும் இவர் தற்போது தனது 170வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதன்பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்த ரஜினி தனக்கென சம்பாதித்த ரசிகர் பட்டாளம் அதிகம். ரஜினிகாக உயிரையே கொடுக்கும் அளவிற்கு ரசிகர்களை சம்பாதித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை விரும்பாதவர்கள் என இருக்கவே முடியாது.

இதையும் வாசிங்க:வடிவேலு எல்லாம் ஒரு மனுஷனா… மதுரைக்காரனோட மானத்த வாங்காதப்பா… பயில்வான் பொளேர்..!

இவர் வில்லனாக நடித்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தின் படபிடிப்பின் போது மேக்கப் மேன் இப்படத்தின் கதாநாயகனான கமலுக்கு மேக்கப் போட்டு கொண்டிருந்தாராம்.

அப்போது ரஜினி அந்த மேக்கப் மேனிடம் சென்று தனக்கும் மேக்கப் போடுமாறும் மேலும் தான் ஒரு காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாய் வருவேன் எனவும் கூறியுள்ளார். ரஜினியின் அந்த சொல்லை கேட்டதும் அந்த மேக்கப் மேனுக்கும் ரஜினி கண்டிப்பாக பெரிய கதாநாயகனாக வருவார் என தோன்றியதாம். பின்னர் அப்படத்தில் அவருக்கு மேக்கப் செய்து விட்டாராம். இவ்வாறு ரஜினிக்கு மேக்கப் போட்டவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:அந்த சீனில் நடிக்க மறுத்த எம்ஜிஆர்.. சமாதனப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்..

google news
Continue Reading

More in Cinema History

To Top