Cinema News
சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..
Rajinikanth: 80களில் சினிமாவில் நடிக்க வந்த பலருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும்தான். அவர்களுக்கு பின்னால் நடிக்க வந்த பல நடிகர்களிடமும் அவர்களின் பாதிப்பு இருந்தது. குறிப்பாக சிவாஜியின் பாதிப்பு பல நடிகர்களிடமும் இருந்தது. சோகமான காட்சி என்றால் அதற்கு ரெஃபரன்ஸ் நடிகர் திலகம்தான்.
அந்த அளவுக்கு எல்லோரிடமும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார் நடிகர் திலகம். ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தர் ஜனரஞ்சகமான திரைப்படங்களை தயாரிக்க நினைத்து கவிதாலாயா என்கிற பட நிறுவனத்தை உருவாக்கினார். தான் தயாரிக்கும் முதல் படத்தில் தான் அறிமுகம் செய்த ரஜினியே ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதையும் படிங்க: விஜய் படத்தில் ரஜினியா? என்னங்க சண்டை செய்ற நேரத்துல இப்படி ஒரு ஷாக்கை கொடுக்குறீங்க?
ரஜினியை சந்தித்து இதுபற்றி பேசி ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்தார். ஆனால், ரஜினி அதை வாங்க மறுத்தார். எப்படியோ அந்த பணத்தை கொடுத்துவிட்டு வந்த பாலச்சந்தர் அப்போது ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வந்த எஸ்.பி.முத்துராமன் அப்படத்தை இயக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
படவேலைகள் துவங்கியது. நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடங்கள். அதில் வரும் அப்பா வேடம் ஒரு கெத்தான பணக்காரர். அந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்பது பற்றி ரஜினிக்கு எந்த ஐடியாவும் வரவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் ரஜினி உதவி கேட்பது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரந்திடம்தான்.
இதையும் படிங்க: சிவாஜி அப்பவே பதில் சொல்லிட்டார்!.. கலைஞர் 100 விழாவில் ஏழரையை இழுத்து வசமாக சிக்கிய ரஜினி..
இதுபற்றி ரஜினி கேட்டதும் அவரை அழைத்துக்கொண்டு ஒரு தியேட்டருக்கு போனார் ஒய்.ஜி.மகேந்திரன். அந்த தியேட்டரில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘உயர்ந்த மனிதன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்தில் பணக்கார முதலாளியாக அசத்தியிருந்தார் சிவாஜி. அப்படத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்ததும் ரஜினிக்கு ஒரு ஐடியா கிடைத்தது.
அதேநேரம், சிவாஜியின் நடிப்பை ரெஃப்ரன்ஸ்ஸாக எடுத்துகொண்டாலும் நெற்றிக்கண் படத்தில் தனது தனித்தன்மையான நடிப்பாலும், ஸ்டைலாலும் பல காட்சிகளிலும் அந்த கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பதுதான் உண்மை. ரஜினியின் வெரைட்டியான நடிப்பில் வெளிவந்த படங்களில் நெற்றிக்கண் ஒரு முக்கியமான திரைப்படமாகும்.
இதையும் படிங்க: ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி!. வெளியான வீடியோவால் ஹேஷ்டேக்கில் வந்த தலைவர்…