Cinema History
ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…
Actor rajini: ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது பாட்ஷா படம்தான். இதற்கு முன்பே பல வருடங்களாக ரஜினி ஆக்ஷன் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்திலிருந்துதான் ரஜினி மாஸ் ஹீரோவாக பார்க்கப்பட்டார். பொதுவாக ரஜினியை பிடிக்காத மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும் படி இருந்தது.
அதற்கு காரணம் இந்த படத்தில் அமைந்த ரஜினியின் கதாபாத்திரம். மும்பையில் போலீஸே பயப்படும் டானா இருக்கும் ரஜினி ஒரு கட்டத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு சென்னை வந்து சாதாரண ஆட்டோ ஓட்டுனர் மாணிக்கமாக வாழ்வார். வில்லன்கள் அவரை மீண்டும் சீண்ட பாட்ஷாவாக மாறி அவர்களை வதம் செய்வதுதான் கதை.
இதையும் படிங்க: ஜெயிலர் மாஸ் ஹிட் அடிச்சும் சம்பளத்தை குறைத்து வாங்கிய ரஜினி!.. தலைவருக்கு ஒரு கணக்கு இருக்கு!
இந்த படத்தில் ரஜினியின் ஸ்டை, உடல் மொழி, அவரின் நடிப்பு என எல்லாமே அசத்தலாக இருக்கும். குறிப்பாக டான் பாட்ஷாவாக அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஒரு ரியல் டான் போலவே ரஜினி நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி படத்தில் தேவாவின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருந்தது.
குறிப்பாக, ‘பாட்ஷா பாரு பாட்ஷா பாரு’ பாடலும் ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு அவர் அமைத்த பின்னணி இசையும் ரசிகர்களை இப்படத்தின் மீது ஒன்ற வைத்தது. அதேபோல், இந்த படத்தில் ரஜினி பேசிய ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ வசனமும் மிகவும் பிரபலமானது.
இதையும் படிங்க: பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ஒரு ஸ்டாராக மாற்றிய இயக்குனர்! நன்றிக்கடனா ரஜினி செய்த செயல்
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் திருப்பதி சாமி படத்தில் பணிபுரியும் ஒருவரிடம் ஒரு வேலையை சொல்கிறார். ஆனால், அவர் செய்யவில்லை. இதில் கோபமடைந்த அவர் ‘டேய் உன்கிட்ட எத்தன தடவடா சொல்றது. இனிமே ஒன்னு பண்ணு. நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி நினைச்சுக்கோ’ என சொல்கிறார்.
அருகில் அமர்ந்திருந்த ரஜினிக்கு எங்கோ பொறி தட்டியது. அவரை அழைத்து ‘இப்ப நீங்க என்ன சொன்னீங்க’ என கேட்டு அதை பேப்பரில் எழுதியும் வைத்துக்கொண்டார். மேலும், உடனே திருப்பதி சாமிக்கு ஒரு தொகையை செக் போட்டு கையில் கொடுத்துவிட்டார். அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி தனது ஸ்டைலில் சொல்லி கைத்தட்டலை வாங்கினார் ரஜினி. இப்படம் வெளியான போது சின்ன குழந்தைகளும் அந்த வசனத்தை பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினியே நம்பாத இரண்டு படங்களை மெகா ஹிட் ஆக்கிய 2 பேர்!.. அட இது அவரே சொன்னதுதான்!..