கடந்த 20 வருடங்களாக அதிக வெற்றியை கொடுத்த நடிகர்..! விஜய், அஜித் இல்லைன்னா வேற யாரு...?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர் நடிகர் ரஜினி, கமல், விஜய்,அஜித். இவர்களை அடுத்ததாக அந்த இடத்தை பிடிப்பதற்கு போட்டி போடுபவர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ்,சிம்பு என பல நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
ரஜினி, விஜய், அஜித் இவர்கள் ஏராளமான ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் படங்கள் வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். அதுவும் ரஜினி, கமல் ஆகியோர் இப்பவரைக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு சவாலாகவே இருக்கின்றனர்.
70 வயதிலயும் அதே புத்துணர்ச்சியுடன் மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில வருடங்களாகவே முன்னனி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இவர்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையில் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவிற்கு அதிக வெற்றியை கொடுத்த நடிகர் யாரென்று ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில்
அதில் நடிகர் ரஜினி தான் முதலிடத்தில் இருக்கிறாராம். இரண்டாவது இடத்தில் விஜய். மூன்றாவது இடத்தில் அஜித். மற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். 80 கால கட்டத்தில் சினிமாவை ஆண்டு வந்த ரஜினி இன்று வரை டஃப் கொடுக்கும் இடத்தில் தான் இருக்கிறார் என பார்க்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.