பிரபல தயாரிப்பாளரை குடிக்க வைக்க ரஜினி பட்ட பாடு!.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?..
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக, துணை நடிகராக, இரண்டாம் கதாநாயகனாக, நடிகராக, பெரிய நடிகராக, உச்ச நடிகராக என படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கே.பாலசந்தரால் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு பின் கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்து தன் அந்தஸ்தை அடைந்தார்.
இவர் சினிமாவில் நடிக்க வரும் போதே கமல் ஒரு அந்தஸ்தான நடிகராக இருந்தார். அதன் பின் முதன் முதலில் ‘பைரவி’ படத்தின் மூலம் தான் கதாநாயகனாக நடித்தார். அவரை முதன் முதலில் கதாநாயகனாக்கிய பெருமை எழுத்தாளர் கலைஞானத்தையே சேரும்.
அந்தப் படத்தின் மூலம் தான் அவரின் நடிப்பு பலருக்கு அறியப்பட்டது. அதனை அடுத்து வெற்றிக் கனிகள் அவரை தேடி வந்தன. சினிமாவில் ஒரு பக்கம் கோலோச்சி வந்தாலும் தன் பழக்க வழக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டொழிந்து வந்தார் ரஜினி.
இதை பற்றி அவரே பல மேடைகளில் பேசியிருக்கிறார். ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் சிகரெட் போகும் என்றே தெரியாதாம். அதே போல் இரவானால் கண்டிப்பாக மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. சில சமயங்களில் காலையிலேயே பாட்டிலுடன் உட்கார்ந்து விடுவாராம்.
இவையெல்லாவற்றையும் தாண்டி தினமும் மாமிசம் இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். இந்த நிலையில் பிரபல நடிகரும் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக இருந்த பிரமிடு நடராஜன் ரஜினியை பற்றி ஒரு பேட்டியில் கூறினார்.
அதாவது அவருக்கு குடிப்பழக்கம் உடைய நண்பர்கள் கிடைத்தால் நடராஜனை தேடமாட்டாராம். கிடைக்கவில்லை என்றால் நடராஜனை அழைத்து இரவு இரண்டு மணிவரைக்கும் பேசிக் கொண்டே இருப்பாராம். அதுவும் பேசும் போது ரஜினி சிகரெட் பிடித்துக் கொண்டே பேசுவாராம். ஆனால் பிரமிடு நடராஜன் சரியான டீ டோட்லர். எந்தப் பழக்கமும் இல்லாத நபர்.
இதையும் படிங்க : ரஜினி ஒரு சுண்டைக்காய்!. எனக்கு அப்பவே தெரியும்… இப்படி சொல்லிட்டாரே மன்சூர் அலிகான்!….
ஒரு சமயம் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பின் போது நடராஜனின் மனைவியிடம் ரஜினி ‘மாமி, இந்த செட்யூலுக்குள் உங்க ஆத்துக்காரரை நான் குடிக்க வைத்து விடுவேன், அதன் பிறகு என்னை எதுவும் சொல்லக் கூடாது’ என்று சபதம் போட்டு சொன்னாராம். ஆனால் அது பிரமிடு நடராஜனிடம் பலிக்கவில்லை. இதை ஒரு பேட்டியில் பிரமிடு நடராஜனே ஒரு பேட்டியின் போது கூறினார்.