தலைவர் பட ’தலைப்பை’ நிராகரித்த கமல்....! விழி பிதுங்கி நின்ற ரஜினி...!
1991 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் தளபதி. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா போன்றோர் நடித்திருந்தனர். படத்தை மணிரத்னம் இயக்க இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் தலைப்பை முதலில் ரஜினி கமலிடம் தான் கூறினாராம். ஆனால் கமல் காதில் தளபதி என்ற பெயருக்குப் பதிலாக ‘கணபதி’ என்று கேட்டதாம்.
உடனே கமல் ஐய்யோ வேண்டாம் ரஜினி. தலைப்பு நன்றாக இல்லை எனக் கூறினாராம். இதைக் கேட்ட ரஜினிக்கு ஆச்சரியமாக இருந்ததாம். ஏன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என ரஜினி கேட்க இதென்ன தலைப்பு விநாயகர் சதுர்த்திக்கு ஏதோ பூஜை போடுகிற மாதிரி. படத்தோட தலைப்பு நல்ல கனமாக இருக்க வேண்டாமா? அத விட்டு விட்டு கணபதி-னு சொல்றீங்கனு கேட்டாராம்.
உடனே நம்ம சூப்பர்ஸ்டார் அது கணபதி இல்லை ‘தளபதி’ என சொல்ல அதன் பிறகு தான் கமல் அப்படியா! அப்ப சரி தலைப்பு பட்டைய கிளப்புதுனு கூறினாராம். இதை ஒரு மேடையில் ரஜினியின் முன்பே கமல் தன் அனுபவத்தை கூறினார்.