Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கவுண்டமணி செந்தில் இவர்களுக்கு பிறகு தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் நடிகர் வடிவேல். வைகைப்புயல் என அ அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டு வருகிறார். நாகேஷுக்கு பிறகு உடல் அசைவுகளாலும் முக பாவனையாலும் நகைச்சுவையில் ஜொலிப்பவர் வடிவேலு.
ஆரம்பத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து நடிகர்களின் படங்களிலும் வடிவேலு இருந்தார். ஆனால் கேப்டனை எதிர்த்து தேர்தலில் பிரச்சாரம் செய்த வடிவேலு அதிலிருந்தே சினிமாவில் இருந்து விலக வேண்டியதாயிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் இடைவெளி எடுத்துக் கொண்டார். இதனிடையில் கொரானா வந்து நான்கு வருடங்களை வடிவேலுவை பார்க்க முடியாமல் போனது,
இதையும் படிங்க: கோட் பதிலாக தளபதி69ஐ கடைசி படமாக மாற்ற இதான் காரணம்… நெத்தியடியாக சொன்ன பிரபலம்…
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் படத்தில் ஆஜரானார் வடிவேலு. ஆனால் அந்தப் படத்தில் வடிவேலுவின் காமெடி எடுபடவில்லை. அதனால் சோலோவாக ஹீரோவாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார். அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இப்போது கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.
இந்த நிலையில் ஹீரோக்களே பஞ்ச் வசனம் பேசி ஸ்கோர் செய்த நிலையில் ஒரு காமெடி நடிகரை பஞ்ச் வசனம் பேச செய்தவர் இயக்குனர் சுராஜ். அதுவும் வடிவேலுவுக்கு அதிக பஞ்ச் வசனம் கொடுத்து பெருமை சேர்த்தார். குறிப்பாக தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு ‘இதுதான் அழகுல மயங்குறதா’ என்று பஞ்ச் வசனம் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தியிருப்பார்.
இதையும் படிங்க: நிஜமாவே சிம்புவுக்கும் ஜெயம் ரவிக்கும் பிரச்சினையா? பொன்னியின் செல்வனை அடுத்து சூடுபிடிக்கும் தக் லைஃப்
இதே வசனத்தை மேலும் பிரபலப்படுத்தியவர் ரஜினி. அவர் நடித்த சிவாஜி படத்தில் வடிவேலு பேசிய அதே பஞ்ச் டையலாக்கை ரஜினியும் பேசியிருப்பார். இப்படி வடிவேலு பேசி பஞ்ச் டையலாக் ரஜினி பேசுற அளவுக்கு ஃபேமஸ் ஆனது என சுராஜ் கூறினார்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…