திடீரென கோயில் கோயிலாக சுற்றும் ரஜினி!.. அட இதுதான் காரணமா?...

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்சமயம் திருப்பதியில் வெங்கடாசலபதியை தரிசனம் செய்து கொண்டு வருகிறார். குடும்பத்தோடு சென்றிருப்பார் என்று பார்த்தால் தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

aishwarya rajini
எப்போதும் உள்ள வீர நடையுடன் சாமியை தரிசனம் செய்யும் ரஜினியின் வீடியோ தான் இப்போது மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது. மேலும் இந்த தரிசனம் முடிந்த கையோடு ஆந்திராவில் இருக்கும் கடப்பா நகரில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு தர்காவுக்கும் செல்ல இருக்கிறாராம் ரஜினி.
இதையும் படிங்க : எம்ம இது உங்களுக்கே ஓவரா இல்ல?.. முத்து படத்தில் மீனாக்கு பதிலா?.. நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த வாய்ப்பேச்சு நடிகை!..
திடீரென ஏன் இந்த ஆன்மீக சுற்றுலா? அதுவும் மகள் ஐஸ்வர்யாவை மட்டும் அழைத்துக் கொண்டு செல்வது ஏன்? என விசாரித்தால் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றது. நீண்ட நாள்களுக்கு பிறகு மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் உருவாக இருக்கிறது.

rajini aishwarya
லால் சலாம் என்ற பெயரில் அதுவும் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கப்பட இருக்கிறதாம். ஒரு வேளை அந்த படம் நல்ல படியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ஐஸ்வர்யாவிற்கு ஒரு எதிர்காலத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாமியை தேடி போயிருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : அகங்காரத்தால் அழிந்த நடிகர்கள்!.. வாய்ப்புகள் வந்தும் பயன்படுத்த தவறிய தமிழ் பிரபலங்கள்!..
இந்த தகவல் வெளியான நிமிடத்தில் அடுத்தடுத்த பல கேள்விகள் முன் வைக்கப்படுகிறது. ஏன் மகள் இயக்கும் படம் மட்டும் நல்லா வந்தால் பரவாயில்லையா? அவரே நடித்துக் கொண்டிருக்கும் ஜெய்லர் படமும் சரியாக வரவேண்டும் என்பதற்கு கூட போயிருப்பார் என்று அந்த வீடியோவை பார்த்த பலர் கீழே கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர்.

rajini