ரஜினியோட அந்த படத்தை எடுக்க மாட்டேன்..! சங்கர் கூறிய காரணம் இதுதான்..!

by Rohini |
rajini_main_cine
X

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் ஓரளவுக்கு வெற்றி கண்டது. அதன் பின் ரஜினியின் அடுத்தபடமான தலைவர் 169 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், டான் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

rajini1_cine

ரஜினியின் இந்தப் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. அண்ணாத்த தோல்வி, பீஸ்ட் படத்தின் தோல்வி ரஜினி மற்றும் நெல்சனை கொஞ்சம் தாக்கியது என கூறலாம்.

rajini2_cine

அதனால் அந்த படத்தில் உள்ள தவறுகள் எதுவும் இதில் வந்து விடக்கூடாது என இருவரும் கவனமாக இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் ரஜினியின் ரோபோ படத்தை பற்றி ஒரு மேடையில் பேசினார்.அந்த படத்தை தமிழில் எடுக்க மாட்டேன் என்று கூறி வந்தாராம்.

rajini3_cine

ஏனெனில் தமிழில் எடுத்தால் ஏகப்பட்ட பொருட்செலவு ஆகும். பணம் கொடுக்க முன்வரமாட்டார்கள் என நினைத்து ஹிந்தியில் எடுக்கலாம் என முடிவு எடுத்தாராம். ஆனால் ரஜினியின் சிவாஜி பட வெற்றி அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றி விட்டது எனக் கூறினார். அதன் பிறகு தான் தமிழில் ரோபோ படத்தை எடுத்தேன் என்று கூறினார்.

Next Story