‘காவாலா சாங்’ படப்பிடிப்பின் போது கடுப்பான ரஜினி - தலைவரின் ஆசையை தவிடுபொடியாக்கிய நெல்சன்

rajini
நேற்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது ஜெய்லர் படத்தின் ஆடியோ லாஞ்ச். இந்த விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய பிரபலங்களும் ஜெய்லர் படத்தில் நடித்துள்ள நடிகர்களும் கலந்து கொண்டனர். விழா மேடைக்கு சும்மா கெத்தாக வந்து இறங்கினார் ரஜினி. ரஜினியின் வருகை ஆடிட்டோரியத்தில் அமர்ந்துள்ள ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தன.
உள்ளே நுழைந்ததும் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் தான் ரஜினியை வரவேற்றார். இருவரும் கை கோர்த்து ஒன்றாக ஆடிட்டோரியத்திற்குள் வந்தனர். மேலும் அனிருத்தின் தீப்பொறியான பெர்ஃபார்மன்ஸ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வாவ் சொல்ல வைத்தது.

rajini1
இதில் தமன்னாவின் நடனமும் கூடுதல் எனர்ஜியை தந்தது. இந்த விழாவில் ரஜினி விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏதாவது பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அப்படி எதுவும் பேசவில்லை. மேலும் இந்தப் படத்தை எப்படி சம்மதித்தேன் என்று விளக்கமாக கூறியிருந்தார் ரஜினி.
அதாவது நெல்சன் இந்தப் படத்தை எடுக்கிறார் என்று சொன்னதும் ஒரு பக்கம் அவர் விஜயை வைத்து எடுத்த பீஸ்ட்டின் தோல்வி ரஜினியை சிறிதாக பதற வைத்ததாம். உடனே ரஜினியின் நண்பர்கள் ரஜினிக்கு போன் செய்து இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் கூறினார்களாம். உடனே ரஜினி யோசிக்க ஆரம்பித்தாராம்.
அதன் பிறகு சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினியிடம் பீஸ்ட் படம் விமர்சன ரீதியாகத்தான் சரியாக வரவேற்பை பெறவில்லையே தவிர வியாபார ரீதியாக மாபெரும் வெற்றிப் பெற்ற படம். அதனால் நெல்சனுடன் இணைந்து பணியாற்ற நீங்கள் தயங்க வேண்டாம் என்று கூறினார்களாம். அதன் பிறகே ரஜினி இதில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

rajiin2
மேலும் அந்தப் படத்தில் அமைந்த காவாலா சாங் படப்பிடிப்பில் ஆறு நாள்கள் கலந்து கொண்டாராம் ரஜினி. ஒரு நாள் காலையிலேயே வர சொல்லியிருக்கிறார்கள். மதியம் தான் சூட்டிங் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரைக்கும் ரஜினி காத்திருந்தாராம். அதன் பிறகு மாலை 5 மணிக்கு ஒரே ஒரு ஸ்டெப் தான் வந்து முடித்து விடுங்கள் என்று அழைத்திருக்கிறார்கள்.
அதற்கு ரஜினி என்னது ஒரு ஸ்டெப் தானாம். அப்போ தமன்னாஜியுடன் என்னால முழுவதும் ஆட முடியாதா என்று கேட்டாராம். இதெல்லாம் ரஜினி அந்த மேடையில் அவரே சொல்லியிருக்கிறார். வயசானாலும் தலைவருக்கு இன்னும் டூயட் ஆட வேண்டும் என்ற ஆசை விட்டபாடில்லை.