கண்ணை காட்டிய ஸ்ரீதேவி... அடம்பிடித்த ரஜினி.. ஆனால் பாட்டு செம ஹிட்டு!...
தமிழ் சினிமா துவங்கிய காலத்தில் தயாரிப்பாளர்களின் கையில்தான் சினிமா இருந்தது. தயாரிப்பாளருக்கு பின் ஆளுமை செலுத்துபவராக இயக்குனர் இருப்பார். கருப்பு வெள்ளை காலத்தில் முதலாளியான தயாரிப்பாளர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வார்.
ஆனால், சினிமா நடிகர்களின் கையில் வருவதற்கு எம்.ஜி.ஆர் காரணமாக இருந்தார். அவர் என்ன சொல்கிறாரோ அதுவே இறுதி முடிவு. அவர்தான் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடல் வரிகள், பாடலுக்கான ட்யூன்கள் என எல்லாவற்றையும் அவர்தான் முடிவு செய்வார். தலையிட்டாலும் எம்.ஜி.ஆரின் படங்களும், பாடல்களும் ரசிகர்களை கவரும்படி அமைந்ததற்கு அவரே முக்கிய காரணமாக இருந்தார்.
அதேநேரம் பாராதிராஜா, பாலச்சந்தர், மகேந்திரன் உள்ளிட்ட சில நடிகர்கள் வந்த போது சினிமா இயக்குனர்களின் கையில் சென்றது. அது சினிமாவின் பொற்காலமாக இருந்தது. ஆனால், இவர்களின் இயக்கத்தில் நடித்த ரஜினி எம்.ஜி.ஆர் பாணியில் சினிமாவை மீண்டும் ஹீரோக்கள் கையில் மாற்றினார். இப்போது அது விஜய், அஜித் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். குகநாதன் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் தனிக்காட்டு ராஜா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால், ஸ்ரீதேவியுடன் தனக்கு இன்னொரு டூயட் பாடல் வேணும் என ரஜினி அடம்பிடித்தார். ஸ்ரீதேவியும் ரஜினியிடம் கண்ணை காட்டினார். ஆனால், இயக்குனர் குகநாதனுக்கு இதில் விருப்பமில்லை.
பொதுவாக ரஜினி எந்த குறுக்கீடும் செய்யாதவர் என பெயரெடுத்தவர். அவர் வற்புறுத்தியதால் வேறுவழியின்றி அப்படத்தில் வைக்கப்பட்ட பாடல்தான் ‘சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே’ பாடல். இளையராஜாவின் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், எஸ்.ஜானகியும் பாடிய இப்பாடல் இசை ரசிகர்களுக்கு பிடித்தமான மெலடி பாடல்களின் வரிசையில் இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டைட் ஜாக்கெட்டில் சும்மா அதிருது!… மிச்சம் வைக்காம காட்டும் ஜான்வி கபூர்…