Connect with us
guna

Cinema History

குணா படத்தை பார்த்துவிட்டு இயக்குனரிடம் ரஜினி கேட்ட கேள்வி!.. மனுஷனுக்கு இவ்வளவு ஆசையா!..

சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1991ம் வருடம் வெளியான திரைப்படம் குணா. இந்த படத்தில் ரோஷிணி எனும் ஒரு பெண்ணை கதாநாயகியாக அறிமுகம் செய்தார் கமல். மேலும், ரேகா, ஜனகராஜ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தோடு மணிரத்தினத்தின் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடித்து உருவான தளபதி படமும் வெளியானது. தளபதி படம் ஓரளவுக்கு வசூலை பெற்றுவிட குணா படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்துவிட்டது. ஏனெனில், அது ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல் ஒரு கலைப்படமாக இருந்தது.

இதையும் படிங்க: குணா பட குகையை இப்படித்தான் கண்டுபிடிச்சோம்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சந்தானபாரதி…

கமல் ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருந்தாலும் பொதுவான ரசிகர்களை இப்படம் கவரவில்லை. அதேநேரம், 33 வருடங்கள் கழித்து இப்போது மஞ்சும்மெல் பாய்ஸ் படம் மூலம் எல்லோரும் குணா படத்தை பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள். மலையாள மொழியில் உருவாகி இருக்கும் இந்த மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

உலகம் முழவதும் 150 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்திருக்கிறது. அதோடு, தமிழகத்தில் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு மலையாள திரைப்படமும் தமிழகத்தில் இவ்வளவு வசூல் செய்தது இல்லை. அதேபோல், மஞ்சும்மெல் பாய்ஸ் போல எந்த மலையாள படமும் இதுவரை அதிக வசூலை பெற்றது இல்லை. எனவே, இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது்.

இதையும் படிங்க: ‘குணா’ பட ஹீரோயினுக்கு நடந்த டார்ச்சர்? இந்த நடிகையின் சகோதரியா அவங்க.. குகையை விட மர்மமா இருக்கே

கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் ரஜினி. கமலின் எந்த படம் வெளியானாலும் அதை பார்த்துவிடுவார். கமல் நடிப்பில் வெளிவந்த ஹேராம் படத்தை 20 தடவைக்கு மேல் பார்த்ததாக சொல்லி இருக்கிறார். அதேபோல், நாயகன் படம் பார்த்துவிட்டு தொலைப்பேசியில் கமலை அழைத்து வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு கமலின் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி விட்டுதான் வீட்டுக்கே போயிருக்கிறார். குணா படம் பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் சந்தானபாரதியிடம் ‘என்னை வைத்தெல்லாம் குணா மாதிரி ஒரு படம் பண்ண மாட்டீங்களா?. நான் அதுக்கு செட் ஆக மாட்டேனா?’ என கேட்டிருக்கிறார். இதை சந்தானபாரதியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top