அந்த நடிகரின் டைரக்ஷனில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி.. நைசாக நழுவிய பீம்பாய் நடிகர்

rajini 4
சமீபகாலமாக அஜித்தை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி கொண்டு வருகின்றது. ஆனால் அஜித்திற்கு தனுஷ் பத்து வரிகள் கொண்ட ஒரு கதையை சொன்னதாகவும் கார் ரேஸ் முடித்துவிட்டு முழு கதையை அஜித் கேட்பதாக கூறியதாகவும் வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறினார். இதற்கு முன் தனுஷ் முதன் முதலில் இயக்கிய படம் ப பாண்டி.
ரேவதி, ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியான அந்த படம் வித்தியாசமான ஒரு காதல் கதையை மையப்படுத்தி அமைந்திருந்தது. இந்த படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் தான் சொன்னாராம் தனுஷ். அந்த படத்தின் கதையை கேட்டு ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. ஆனால் இந்த கதையில் நான் நடித்தால் நன்றாக இருக்காது. ஏனெனில் நான் நடிக்கும் படம் கமர்சியலாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதனால் இந்த கதையில் ராஜ்கிரண் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னதே ரஜினி தானாம்.
அப்படி என்ன இவர்களுக்குள் ஒரு பந்தம் என்று கேட்டால் ராஜ்கிரணுக்கும் ரஜினிக்கும் ஏற்கனவே ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது.80கள் காலத்தில் ரஜினி எந்த அளவு பீக்கில் இருந்தாரோ அதற்கு இணையாக ராஜ்கிரணும் மிகப்பெரிய புகழோடு இருந்தார். இவருடைய படங்களை பார்ப்பதற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வரும். ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த நடிகராக ராஜ்கிரண் அறியப்பட்டார்.
அதனால் ஒரு சமயம் ராஜ்கிரணை போனில் தொடர்பு கொண்ட ரஜினி உங்களை சந்திக்க வேண்டும் எனக் கூறினாராம். உடனே ராஜ்கிரண் நானே வருகிறேன் என கூறிவிட்டு ரஜினியை பார்க்க சென்று இருக்கிறார். அப்போது ராஜ்கிரணிடம் ரஜினி உங்களுடைய டைரக்ஷனில் நான் ஒரு படம் நடிக்க வேண்டும் என கூறினாராம். உடனே ராஜ்கிரணும் சரி என சொல்லிவிட்டு வந்துவிட்டாராம்.
ஆனால் ராஜ்கிரண் இயக்கத்தில் ரஜினி படத்தில் நடிக்கவே இல்லை. ஏனெனில் பிரதீப் ரங்கநாதன் ஸ்டைல் தான் ராஜ்கிரணும் பயன்படுத்தி இருக்கிறார். கோமாளி, லவ் டுடே என அடுத்தடுத்து பெரிய வெற்றி படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்ததாக விஜயை வைத்து கோட் படத்த இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படி டைரக்ஷனில் போய்விட்டால் நடிகனாக மக்கள் தன்னை பார்க்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் வந்த ஒரு பெரிய வாய்ப்பையும் மறுத்துவிட்டார்.

rajkiran
அதே மாதிரி தான் ராஜ்கிரணும் நடிகராக பல படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்த காலம் அது. அந்த நேரத்தில் டைரக்ஷன் என போய்விட்டால் மக்கள் தன்னை நடிகராக பார்க்க மாட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் தான் ரஜினியை வைத்து அவர் படமே பண்ணவில்லை.என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.