Cinema History
இது நான் நடிக்க வேண்டிய படம்!. என்கிட்ட ஏன் வரல?!.. இயக்குனரிடம் கோபப்பட்ட ரஜினி!…
சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். அதேபோல், இயக்குனர் உருவாக்கும் கதையில் எந்த நடிகர் நடிப்பார் என சொல்லவே முடியாது. ஒரு நடிகரை மனதில் வைத்து கதையை எழுதுவார் இயக்குனர். ஆனால், அந்த நடிகருக்கு அந்த கதை பிடிக்காது. அல்லது, கதை பிடித்திருந்தாலும் வேறு படம் இருப்பதால் அதில் நடிக்க முடியாமல் போகும்.
‘இந்த கதையில் நான் நடிக்கிறேன். எனக்காக சில மாதங்கள் காத்திருக்க முடியுமா?’ என நடிகர் கேட்பார். சில இயக்குனர்கள் அதை ஏற்றுக்கொண்டு காத்திருப்பார்கள். ஆனால், எல்லா இயக்குனர்களும் அப்படி காத்திருக்க மாட்டார்கள். ரமணா படத்தை முடித்த பின் கஜினி படத்திற்கான கதையை எழுதினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதையும் படிங்க: சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள்!. ரசிகர்களுக்கு ரஜினி கொடுக்கப்போகும் டபுள் ட்ரீட்!..
அஜித்திடம் சென்று அந்த கதையை சொன்னார். அவருக்கும் அந்த கதை பிடித்திருந்தது. ஆனால், முருகதாஸை காத்திருக்க சொன்னார். ஆனால், பொறுமை இல்லாத முருகதாஸ் அந்த கதையை சூர்யாவிடம் சொல்லி படமாக எடுத்தார். அதில் கோபப்பட்ட அஜித் அதன்பின் முருகதாஸுக்கு கால்ஷீட்டே கொடுக்கவில்லை. இப்போது வரை அது தொடர்கிறது.
சில கதைகளை இந்த நடிகரிடம் சொன்னால் நடிப்பாரோ இல்லையோ என்கிற சந்தேகம் இயக்குனர்களுக்கு வரும்.. அதனாலேயே போய் சொல்ல மாட்டார்கள். அல்லது அந்த நடிகரை சந்திக்க முயற்சி எடுத்து அது முடியாமல் வேறு ஒரு நடிகரிடம் போயிருப்பார்கள். இதுவும் நடக்கும். கோலிவுட்டில் ரட்சகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரவீன் காந்தி.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டிலேயே அலப்பறையா? ரஜினிகாந்த் வில்லனை கட்டம் கட்டி தூக்கிய போலீசார்
குஞ்சுமோன் அதிக தயாரிப்பு செலவு செய்த படம் இது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஹீரோவாகவும், பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னும் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படத்தை வெளியிட்டார்கள். ஆனால், இது ஒரு தோல்விப்படமாக அமைந்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரவீன் காந்தி ‘ரட்சகன் படத்தை முடித்துவிட்டு முதலில் ரஜினி சாரிடம் போட்டு காட்டினேன். படத்தை பார்த்துவிட்டு ‘இது நான் நடிக்க வேண்டிய படம். என்கிட்ட ஏன் வந்து கதை சொல்லவில்லை?’ என என்னிடம் கேட்டார்’ என சொன்னார்.