இந்த கம்பெனியில எப்படியாவது நடிக்கணும்!.. ரஜினிக்கு இருந்த தீரா ஆசை.. அதுக்கு காரணம் இதுதான்!...

சினிமாவில் அறிமுகம்:
பெங்களூரில் வாலிபராக இருந்த போது பேருந்து நடத்துனராக வேலை செய்தவர் சிவாஜி ராவ். தனக்குள் இருந்த நடிப்பு திறமையை நம்பி தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னை வந்து, நடிப்பு பயிற்சியில் பயிற்சி பெற்று, இயக்குனர் பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிக்க துவங்கியவர். அவருக்கு ரஜினிகாந்த் என பெயர் வைத்தார் பாலச்சந்தர்.
அதன்பின் பல படங்களில் கமலுடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் தனியாக நடிக்க துவங்கினார். சில படங்களில் ஹீரோவாக, அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ரஜினி நடித்து வெளியான படங்கள் ஹிட் அடிக்கவே ரஜினியை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும் ஆசைப்பட்டனர். ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
ரஜினிக்கு வந்த ஆசை:
தனது கேரியரில் ரஜினி ஏவிஎம், தேவர் பிலிம்ஸ் உள்ளிட்ட பல சினிமா நிறுவனங்கள் தயாரித்த படங்களில் நடித்துள்ளார். இப்போது சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ரஜினி படங்களை எடுக்க போட்டி போடுகிறது. தனது அனுபவத்தில் ரஜினி எந்த தயாரிப்பாளரையும் தேடிப்போனதும் இல்லை.
ஆனால், ஒரு நிறுவனத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அது பல வருடங்களாக நடக்கவில்லை. ரஜினி நடிப்பு கல்லூரியில் படித்த போது அவரின் நண்பர்கள் ஒரு குறும்படம் எடுத்தனர். அதில், ரஜினி நடித்தார். முதல் முதலாக அவர் மேக்கப் போட்டு நின்ற இடம் விஜய வாகினி ஸ்டுடியோ. அதன்பின் அவர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் அந்த நிறுவனத்தில் அவர் நடிக்கவில்லை. ரஜினிக்கு அந்த ஆசை இருந்துகொண்டே இருந்தது.
விஜய வாகினி ஸ்டுடியோ:
விஜய வாகினி ஸ்டுடியோ பழம் பெருமை வாய்ந்த சினிமா நிறுவனம். எம்.ஜி.ஆரை வைத்து எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களை எடுத்த நிறுவனம் அது. அதன் நிறுவனர் நாகி ரெட்டி. 1993ம் வருடம் பி.வாசு இயக்கத்தில் ரஜினியை வைத்து உழைப்பாளி படத்தை எடுத்தது விஜய வாகிணி ஸ்டுடியோ. அதாவது, சினிமாவில் அறிமுகமாகி 18 வருடம் கழித்துதான் ரஜினியின் ஆசை நிறைவேறியது.
அதிலேயும், எங்க வீட்டு பிள்ளை படத்தில் இருந்த அதே வீட்டு செட்டில்தான் ரஜினியின் நடித்திருப்பார். கையில் சாட்டையோடு எம்.ஜி.ஆர் நடந்து வரும் படிக்கெட்டில் ரஜினியும் நடந்து வந்து தனது ஆசையை அவர் தீர்த்துக்கொண்டார்.
இதையும் படிங்க: இப்படியெல்லாமா ஆசைப்பட்டார்? வரப்போகும் மனைவி குறித்து ரஜினி போட்டுவைத்த மனக்கணக்கு