சினிமாவை விட்டே விலக நினைத்த ரஜினி!.. சரியான நேரத்தில் உதவி செய்த சிவக்குமார்...
Rajinikanth: சினிமாவில் ஒருவர் பெரிய நட்சத்திரமாக மாறுவதற்கு பின்னால் பலரின் உதவிகளும், ஆதரவும், அன்பும், அரவணைப்பும், அறிவுரைகளும் இருக்கிறது. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். 'நான் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் ரஜினி வேறு ஒருவரின் இயக்கத்தில் அறிமுகமாகியிருப்பார்' என பாலச்சந்தர் சொன்னாலும் அவர் ரஜினிக்கு கொடுத்த வாய்ப்பும், சரியான நேரத்தில் அவருக்கு கொடுத்த அறிவுரைகளும்தான் ரஜினியை சினிமாவில் வளர வைத்தது.
80களில் ஒரே நேரத்தில் பல படங்களில் இரவு, பகலாக நடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார் ரஜினி. இதனால் மதுப்பழக்கமும் அவருக்கு அதிகரித்தது. மனரீதியாக பாதிக்கப்பட்டு சில இடங்களில் ஆக்ரோஷமாகவும் நடந்துகொண்டார். மதுரை விமான நிலையத்தில் ரஜினி செய்த அலப்பறை அவரை காவல் நிலையம் வரை செல்ல வைத்தது. மனநல சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: ஓவர் பந்தா காட்டி ரஜினி படத்தை இழந்த அனிருத்!.. இதெல்லாம் தேவையா புரோ!..
சினிமாவை விட்டு விலகி விடலாம் என ரஜினி பலமுறை நினைத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் அவரின் மனதை மாற்றி இருக்கிறார்கள். ராகவேந்திரா மீது அதிக பற்று ஏற்பட்டு முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட நினைத்து சினிமாவிலிருந்து விலகிவிட நினைத்தார் ரஜினி. ஆனால், பாலச்சந்தர் சொன்ன அறிவுரையில்தான் மீண்டும் நடிக்க துவங்கினார்.
அதேபோல், 80களில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து கொண்டிருந்தார் ரஜினி. இரண்டு மொழிகளுமே அவருக்கு கடினமாக இருந்தது. புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் சிவக்குமாரின் இணைந்து ரஜினி நடித்துகொண்டிருந்தபோது ஒருநாள் சிவக்குமாரின் வீட்டிக்கு போய் சில மணி நேரங்கள் இருந்தார் ரஜினி.
இதையும் படிங்க: செம வைலண்ட்டாக இருந்த ரஜினி!. அம்மாவை போல வந்து காப்பாற்றிய சமூக சேவகி.. ஆச்சர்ய தகவல்!..
அப்போது சிவக்குமாரிடம் ‘இரண்டு மொழிகளிலும் என்னால் நடிக்க முடியவில்லை. சினிமாவிலிருந்து விலகி விடலாம் என நினைக்கிறேன்’ என ரஜினி சொல்ல சிவக்குமாரோ ‘துவக்கத்தில் இப்படித்தான் இருக்கும். எல்லாம் போகப்போக பழகிவிடும். சினிமாவில் தொடர்ந்து நடியுங்கள்’ என சொன்னாராம்.
துவக்கத்தில் கஷ்டப்பட்டாலும் ரஜினி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து தன்னை சூப்பர்ஸ்டாராக நிலை நிறுத்திக்கொண்டார் என்பதுதான் வரலாறு.
இதையும் படிங்க: நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..