எதுவுமே செட் ஆகல...அந்த மாதிரி கதைதான் வேணும்.. அடம்பிடிக்கும் ரஜினி....

நடிகர் ரஜினிக்கு கடந்த சில வருடங்களாகவே போதாத காலம் போல... சந்திரமுகி திரைப்படத்திற்கு பின் பெரிய வெற்றிப்படத்தை ரஜினி இதுவரை கொடுக்கவில்லை. அவர் நடித்து வெளியான லிங்கா, குசேலன், காலா, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரும் வெற்றிப்படங்களாக அமையவில்லை. இடையில் பேட்ட படம் மட்டும் கொஞ்சம் தப்பித்தது. ஆனால், அஜித்தின் விஸ்வாசம் படம் அந்த வசூலையும் அடித்து நொறுக்கிவிட்டது.
எனவேதான், அந்த பட இயக்குனர் சிவாவை அழைத்து கதை கேட்டு நடிக்க விரும்பினார் ரஜினி. அப்படி உருவான திரைப்படம்தான் அண்ணாத்த. ஆனால், இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஓவர் செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் அபத்தமான வசனங்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டது. மேலும், மழை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு வசூலும் பாதித்தது. இதனால், இந்த படம் எப்படியும் வெற்றி பெறும் எனும் காத்திருந்த ரஜினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே, தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. பல இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுனம் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆனால், ரஜினியோ அமைதியாக இருக்கிறாராம். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த கதையில் நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறாராம். எனவே, தன்னிடம் கதை கூறும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிடம் இது போல் ஒரு கதை வேண்டும் என கறாராக கூறிவிட்டாராம். இயக்குனர்களிடம் கதை இல்லை எனில் அப்படி ஒரு கதையை வைத்திருப்பவரிடம் அந்த கதையை வாங்குங்கள் எனவும் கூறியுள்ளாராம்.
மொத்தத்தில் ரஜினிக்கு திருப்தி ஏற்படும் வரை தனது அடுத்த படம் பற்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ரஜினி....